ரேசுக்கு தயாராகிய தனுஷின் `வேலையில்லா பட்டதாரி-2′

அஜித்தின் `விவேகம்’ படத்தின் ரிலீஸ் தேதி 10-ஆம் தேதியில் இருந்து 24-ஆம் தேதிக்கு தள்ளிப்போனதால், தமிழ் சினிமாவில் பல படங்கள் அந்த நாளை பிடிக்க போட்டி போட்டு வருகின்றன. அதன்படி வருகிற ஆகஸ்ட் 11-ல் `தரமணி’, `பொதுவாக எம்மனசு தங்கம்’, `தப்பு தண்டா’, `மாயவன்’, `குரங்கு பொம்மை’, `மகளிர் மட்டும்’, `சத்யா’ மற்றும் `நான் ஆணையிட்டால்’ உள்ளிட்ட 7 படங்கள் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சில படங்கள் தள்ளிப்போகவும் வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில், ஆகஸ்ட் 11 ரேசுக்கு தானும் தயார் என்று கூறும் விதமாக, தனுஷ் – அமலாபால் நடிப்பில் உருவாகியிருக்கும் `வேலையில்லா பட்டதாரி-2′ படமும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியான ரகுவரன் வர்றான் டீசருடன் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அதுமுதல் தனுஷ் ரசிகர்கள் டுவிட்டரில் `வேலையில்லா பட்டதாரி’ படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதிகளை டிரெண்டாக்கி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில் கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online