நாளை முதல் `மெர்சல்’ விஜய்யின் “ஆளப்போறான் தமிழன்”

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் `மெர்சல்’.

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்குகிறார். இப்படத்தில் தளபதி விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளதால், இப்படம் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர்.

எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வருகிற 20-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் நாளை ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் போஸ்டருடன் வெளியிட்டிருக்கிறது.

பாடலாசிரியர் விவேக் வரிகளில் ஆளப்போறான் தமிழன் என்ற வரிகளில் தொடங்கும் அந்த பாடல் நாளை ரிலீசாக இருப்பதாக வெளியான அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றனர். இந்த மகிழ்ச்சியை சமூக வலைளதங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

அந்த பாடல் விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online