`பார்ட்டி’ படத்தில் இணைந்த தென்னிந்திய சல்மான்கான்

`சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ பட வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கவிருக்கும் படம் `பார்ட்டி’. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்க இருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடிக்க இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.

இந்நிலையில், இந்த கூட்டணியில் அழகு ஹீரோ, தென்னிந்தியாவின் சல்மான்கான் என நடிகர் சத்யராஜால் ​புகழாரம் சூட்டப்பட்ட
நடிகர் ஷியாமும் இணைந்திருக்கிறார். இதுகுறித்து நடிகர் ஷியாம் கூறுகையில்,

ஒரு அழகான, ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், இந்த படத்தின் மூலம் தனக்கு மாற்றம் நடக்கும் என்று நம்புவதாகவும் ஷியாம் கூறினார். `பார்ட்டி’ படத்தில் பிரச்சனை பண்ணக்கூடிய மனதில் பதியக்கூடிய ரோல் பண்ணுகிறேன். இளமையான, ஜாலியான டீம் இது. இங்கு இருப்பதே `பார்ட்டி’ பண்ற மாதிரிதான் இருக்கு. எனவே இதிலேயே எனது அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கலாம் என்று கூறினார். ஷியாம் நடிப்பில் `காவியன்’ படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பிஜி தீவுகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online