டீசர் சாதனைக்கு நடுவே வெளியாகும் `விவேகம்’ டிரைலர்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற 24-ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் `விவேகம்’.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் – காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் இணைந்து நடித்திருக்கும் இப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் ருசீகரமான தகவல் வந்த வண்ணம் உள்ளது. அதேநேரத்தில் `விவேகம்’ படத்தின் டீசர் உலகளவில் புதிய சாதனையையும் படைத்திருக்கிறது.

படத்தில் இருந்து பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியும் நெருங்கி வருவதால் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகமும் அஜித் ரசிகர்களிடைய எழுத் தொடங்கியது. இந்நிலையில், `விவேகம்’ படத்தின் டிரைலர் தயாராகி விட்டதாகவும், டிரைலர் குறித்த அறிவிப்பினை படத்தின் இயக்குநர் சிவா அறிவிப்பார் என்று `விவேகம்’ படத்தின் எடிட்டர் ஆண்டனி ரூபன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே படத்தின் டீசர் உலக சாதனை படைத்திருக்கும் நிலையில், டிரைலரும் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online