மாலை போட வந்த ரசிகருக்கு ‘பளார்’ விட்ட பாலகிருஷ்ணா: வைரலாக பரவும் வீடியோ

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள நந்தியால் தொகுதியில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் உறவினரும், நடிகருமான நந்தமூரி பாலகிருஷ்ணா நேற்று இரவு கர்னூல் மாவட்டத்துக்கு வந்தார். கட்சியினர் மற்றும் தொண்டர்கள் கூடியிருந்து அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

இதைதொடர்ந்து ஓட்டல் அறைக்கு வந்த அவரை காண ரசிகர்கள் திரண்டனர். அப்போது பாலகிருஷ்ணாவுக்கு மலர் மாலைகள் அணிவிக்க முண்டியடித்தனர். அதில் ஒரு ரசிகர் அவர்மீது தவறி விழுந்தார்.

இதில் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணா, அவரை தூக்கி நிறுத்தி பளாரென அறை விட்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் கூறுகையில், “பயணம் செய்த களைப்பில் பாலகிருஷ்ணா வந்து கொண்டிருந்தார். அவருக்கு மலர்மாலை அணிவிக்க ரசிகர்கள் குவிந்தனர். அதில், ஒருவர் பாலகிருஷ்ணா மீது திடீரென விழுந்து விட்டார். அவர் உடனே அந்த ரசிகரை தூக்கி நிறுத்தி தள்ளிவிட்டார்’’ என தெரிவித்துள்ளனர்.

 

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online