சிம்பு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தை ‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கியிருந்தார். நயன்தாரா, ஆண்ட்ரியா, சந்தானம், சூரி ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி வெளிவந்தது. இருப்பினும், ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கிலும் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்தது. தெலுங்கில் ‘சரசுடு’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் ‘சரசுடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.

இப்படத்தின் தமிழ் பதிப்பை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் பசங்க புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருந்தன. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிட்டது. சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online