வடிவேலுடன் ஜோடி சேர்ந்த அஜித் நாயகி

நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலு தற்போது பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து `இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இதில் வடிவேலுக்கு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார். இவர் இதற்கு முன் அஜித்துக்கு ஜோடியாக ‘பில்லா 2’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்குப் பிறகு மலையாளம், இந்தி படங்களில் நடித்த இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் `இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

சிம்பு தேவன் இயக்கத்தில் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. முதல் முறையாக வடிவேலு இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூலையும் குவித்தது.

இந்நிலையில், ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாவது பாகமாக `இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ உருவாகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர்கள் இன்று வெளியானது. மேலும் இன்று முதல் படப்பிடிப்பும் ஆரம்பமாகியுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online