தீபாவளி ரேசில் இருந்து பின்வாங்கிய படம்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் `2.0′ படத்தின் ரிலீஸ் தாமதமானதால், விஜய்யின் `மெர்சல்’ அந்த இடத்தை கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தீபாவளியை ஒட்டி சுசீந்திரன் இயக்கத்தில் `நெஞ்சில் துணிவிருந்தால்’, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இயக்கத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிப்பில் `சொல்லி விடவா’, கவுதம் கார்த்திக்கின் `ஹரஹர மகாதேவகி’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த படங்களுக்கு தியேட்டர்களை ஒதுக்கீடு செய்யும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தீபாவளி ரேசில் இருந்து கவுதம் கார்த்திக்கின் `ஹரஹர மகாதேவகி’ விலகி இருக்கிறது. மேலும் அந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி பூஜை விடுமுறை நாளான செப்டம்பர் 29-ல் `ஹரஹர மகாதேவகி’ படம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே சரஸ்வதி விடுமுறைக்கு சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்’, ஏ.ஆர்.முருகதாஸ் – மகேஷ் பாபு கூட்டணியில் `ஸ்பைடர்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online