ஏ.ஆர்.முருகதாஸ்-ன் அடுத்த அறிவிப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `ஸ்பைடர்’. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இப்படம் வருகிற சரஸ்வதி பூஜையை முன்னிட்டு செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இருந்து `பூம் பூம்’ என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் படத்தில் இருந்து அடுத்த பாடலையும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. `ஆலி ஆலி’ என்ற இரண்டாவது பாடல் வருகிற திங்களன்று (செப்டம்பர் 4) வெளியாக இருப்பதாக ஏ.ஆர்.முருகதாஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் மகேஷ் பாபுவை தமிழில் நாயகனாக அறிமுகம் செய்யும் பிரமாண்ட விழா வருகிற செப்டம்பர் 9-ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

`ஸ்பைடர்’ படத்தின் தமிழ் பதிப்பில் மகேஷ்பாபு அவரது சொந்த குரலிலேயே டப்பிங் பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங்கும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருக்கின்றனர். பரத், ஆர்.ஜே.பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online