விஜய் ஆண்டனிக்கு ஜோடியான 4 நாயகிகள்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, தற்போது நடிகராக வலம் வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான எமன் ரசிகர்களிடையே ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், அவர் தற்போது ஜி.சீனிவாசன் இயக்கத்தில் ‘அண்ணாதுரை’ படத்திலும், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் `காளி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் `காளி’ படத்தில் அவருக்கு ஜோடியாக 4 நாயகிகள் நடித்து வருகின்றனர். சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத், அஞ்சலி உள்ளிட்ட 4 நாயகிகள் முக்கிய கதாபாத்திரதத்தில் நடித்து வருகின்றனர் என்பதை இயக்குநர் கிருத்திகா உறுதிப்படுத்தி இருக்கிறார்.

`காளி’ மற்றும் ‘அண்ணாதுரை’ படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பாக பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online