மா.கா.பா.விற்கு கைக்கொடுக்கும் விஷால்

‘வானவராயன் வல்லவராயன்’, ‘நவரச திலகம்’, ‘அட்டி’ ஆகிய படங்களில் நடித்த மா.கா.பா.ஆனந்த் தற்போது ‘மாணிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மார்ட்டின் என்பவர் இயக்கி வருகிறார்.

இப்படம் ஆரம்பிக்கும் போது போஸ்டர் ஒன்று வெளியானது. பாட்ஷா படத்தில் ரஜினி மாணிக் பாட்ஷாவாக இருக்கும் கெட்டப்பில் மா.கா.பா.ஆனந்த் அமர்ந்திருக்கும்படி அந்த போஸ்டரை வடிவமைத்திருந்தனர். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ‘எதிர்நீச்சல்’ படத்தில் சிறு வேடத்தில் சுஜா குமார் நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது. இந்த போஸ்டரை நடிகர் விஷால், செப்டம்பர் 15ம் தேதி வெளியிட இருக்கிறார்.

தரண் இசையமைத்து வரும் இப்படத்திற்கு எம்.ஆர்.பழனிகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online