MENUMENU

தீபாவளி தினத்தை ஸ்கெட்ச் போட்ட விக்ரம்

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் – தமன்னா இணைந்து நடித்திருக்கும் படம் `ஸ்கெட்ச்’. வடசென்னை பின்னணியில் ஆக்ஷன் கலந்த ஸ்டைலிஷ் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார்.

அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் எப்போது ரிலீஸ் என்று காத்திருக்கும் நிலையில், தீபாவளி தினமான அக்டோபர் 18ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது விக்ரம் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேசன்ஸ் மற்றும் மூவிங் பிரேம் இணைந்து தயாரித்துள்ள `ஸ்கெட்ச்’ படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார். விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online