பிரமாண்டமாக நடைபெறும் சந்தானம் படத்தின் இசை வெளியீட்டு விழா

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது நாயகனாக பிசியாகி இருக்கிறார் நடிகர் சந்தானம்.

சந்தானம் நடிப்பில் `சர்வர் சுந்தரம்’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், சந்தானம் தற்போது `சக்க போடு போடு ராஜா’, `ஓடி ஓடி உழைக்கனும்’, `மன்னவன் வந்தானடி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதில் சேதுராமன் இயக்கத்தில் உருவாகி வரும் `சக்க போடு போடு ராஜா’ படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார். விவேக், சம்பத் ராஜ், ஆர்யன், வி.டி.வி. கணேஷ், ரோபோ ஷங்கர், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

நடிகர் சிம்பு இசையமைக்கும் இப்படத்தில் இருந்து அனிருத் பாடிய `கலக்கு மச்சான்’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிம்பு இசையில் யுவன் ஷங்கர் ராஜா, டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் உள்ளிட்டாரும் பாடியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வி.டி.வி. கணேஷ் தயாரித்து வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 14-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. படத்தை வருகிற நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online