இந்தியன் 2 கைவிடப்பட்டதா? தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடிவு பெற்றதைத் தொடர்ந்து, ‘விஸ்வரூபம் 2’ படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் கமல். அதனைத் தொடர்ந்து ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார்.

இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் கமல். இப்படத்தை தில்ராஜு தயாரிக்கவுள்ளார். இந்த அறிவிப்பை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கமலே அறிவித்தார்.

இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்திலிருந்து கமல் விலகிவிட்டதாகவும், சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமூகவலைத்தளத்தில் தகவல் வெளியானது. இச்செய்தி குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டது.

இது குறித்து விசாரித்த போது, “‘இந்தியன் 2’வில் கமல் நடிக்கவிருப்பது உறுதி. ‘2.0’ படத்தின் பாடல் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சங்கர். அதனைத் தொடர்ந்து இசை வெளியீடு உள்ளிட்ட விளம்பரப்படுத்தும் பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் ‘இந்தியன் 2’வில் கவனம் செலுத்தவுள்ளார். மேலும், சூர்யா நடிப்பதாக வெளியான தகவல்கள் தவறானவை” என்று தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online