ரசிகையை கரம்பிடிக்க ஆர்யா விருப்பம்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஆர்யா. ஆனால் அவருக்கு சமீப காலமாக படங்கள் எதுவும் கை கொடுக்கவில்லை.

தற்போது அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சந்தன தேவன்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் ‘சங்கமித்ரா’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஆர்யாவுக்கு நடிகைகள் பலர் தோழியாக உள்ளனர். தமிழ் சினிமாவின் ரோமியோவாகவும் வலம் வருகிறார். ஆனால் அவர் இது வரை எந்த நடிகைகளுடனும் சேர்த்து கிசுகிசுக்கப்படவில்லை.

பிரியாணி செய்து கொடுத்தே ஆர்யா நடிகைகளை வளைத்து விடுவார் என்று அவரை சக நடிகர்கள் கிண்டல் அடிப்பதுண்டு.

இந்நிலையில், சமீபத்தில் ஆர்யா ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும்படியான வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவில் ஆர்யா தன் நண்பரிடம் ‘தம்பியின் மாமனார் எப்போது திருமணம் என்று கிண்டல் செய்துவிட்டார். அதனால், நானும் ஏப்ரல், மே-வில் திருமணம் செய்யலாம்னு இருக்கிறேன் என்று சொல்லிட்டேன்.

காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்யலாம்ல என்று நண்பர் ஆர்யாவிடம் கேட்க, ‘சுத்தி சுத்தி லவ் பண்ணிட்டேன், ஒன்னும் வேலைக்கு ஆகல… நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றேன்’ அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் பேப்பரில் பெண் வேண்டும் என்று விளம்பரம் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்’ என்று ஆர்யா கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று ஆர்யா அவரது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

`போன வாரம் தான் கல்யாணம் செய்வத குறித்து பேசிய வீடியோ ஒன்று லீக்காகிவிட்டது. அது எனக்கு தெரியாமல் என்னுடைய நண்பர்கள் விளையாட்டாக செய்தது. ஆனால் அதில் நான் பேசிய விஷயங்கள் உண்மை தான். நான் திருமணத்திற்காக பெண் தேடுகிறேன். பொதுவாக ஒருவரது வாழ்க்கைத் துணையை நண்பர்கள், குடும்பம், சொந்தக்காரர்கள் உள்ளிட்ட நெருக்கமானர்கள் மூலமாக தேடுவார்கள். அல்லது மேட்ரிமோனி மூலமாக பார்ப்பார்கள். ஆனால் நான் அப்படி இல்லை. எனக்கு எந்த நிபந்தனையும் இல்லை. உங்களுக்கு என்னை பிடித்திருந்தால், உங்களுக்கு ஒரு வாழ்க்கைத் துணையாக இருப்பேன் என நீங்கள் நினைத்தால், 73301 73301 என்ற எண்ணிற்கு கால் செய்யுங்கள். இது ஒன்று விளையாட்டோ, காமெடியோ இல்லை. இது தனது வாழ்க்கை தேடல். கால் பண்ணுங்க’.

என்று முடித்துக் கொண்டார்.

இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆர்யாவை பிடித்த அவரது எந்த ரசிகை ஆர்யாவை கரம் பிடிக்கிறார் என்பதை பொறுத்திருந்த தான் பார்க்க வேண்டும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online