MENUMENU

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிற்கிறாரா விஷால்?

தற்போது தமிழகம் எங்கும் மிகவும் பரபரப்பாக பேசப்படுவது ஆர்.கே. நகர் இடைத்தேர்தல். முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், மற்றும் டிடிவி. தினகரன் அணி சார்பில் டிடிவி தினகரனும் நிற்கிறார்கள். இந்நிலையில், நடிகர் விஷாலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியாகின.

கமலுக்கும், விஷாலுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் விஷால் இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. விஷாலின் துணிச்சலை பார்த்து பலரும் பாராட்டினர். இந்நிலையில் விஷாலுக்கு நெருக்கமான வட்டாரத்தில் கேட்டபோது, விஷால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. அது வெறும் வதந்தி. உண்மை இல்லை என்று கூறியிருக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online