MENUMENU

சமூக வலைதளங்களில் வைரலாகும் சூர்யாவின் கேங்

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கும் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், ‘நவரச நாயகன்’ கார்த்திக், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் இதன் டீசர் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இறுதி கட்ட படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வந்த படக்குழுவினர் நேற்று முன்தினம் படப்பிடிப்பை முடித்தனர்.

கோலிவுட் மட்டுமில்லாமவில் சூர்யாவிற்கு டோலிவுட்டிலும் நல்ல மார்க்கெட் உள்ளதால், படத்தை தெலுங்கிலும் டப் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தெலுங்கு வெர்ஷனுக்கு ‘கேங்’ (GANG) என டைட்டில் சூட்டியுள்ளார்கள். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜாவுடன் இணைந்து UV கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்போது, ‘கேங்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘UV கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இப்போஸ்டர் சூர்யாவின் டோலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 மொழிகளிலும் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online