விஷாலுக்கு எதிரான சேரனின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டால் ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களுக்கும் அரசால் ஆபத்து ஏற்படும் என்றும், இதனால் விஷால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பின்னர் தேர்தலில் நிற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் சேரன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தார்.

இந்நிலையில், விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இயக்குனர் சேரன், உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றார். மேலும் விளம்பரத்திற்காக யார் ஆசைப்படுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.

அனுபவமின்மையும், அவசரமும்தான் விஷாலுக்கு வீழ்ச்சியாக அமைந்திருக்கிறது. யாருக்கும் பாதிப்பு இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று இயக்குனர் சேரன் கூறியிருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online