`சங்கமித்ரா’வுக்கு முன்னதாக ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம்

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `டிக் டிக் டிக்’. இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

ஜெயம் ரவி அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் `சங்கமித்ரா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. எனவே இந்த இடைப்பட்ட காலத்தில் ஜெயம் ரவி புதுமுக இயக்குநர் தங்கவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ராஷி கண்ணா ஏற்கனவே தமிழில் அதர்வா ஜோடியாக `இமைக்கா நொடிகள்’ படத்திலும், சித்தார்த் ஜோடியாக `சைத்தான் கே பச்சா’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் தொடங்கி மார்ச் வரை தொடர்ந்து நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online