MENUMENU

ரசிகனை பாராட்டிய விஜய்

சிபிராஜ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சத்யா’. இதில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், சதீஷ், ஆனந்த் ராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இப்படத்திற்கு சைமன் கே கிங் இசையமைத்துள்ளார்.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஷணம்’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி இருந்தது. திரில்லர் படமாக வெளியாகி இருக்கும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் திரையுலகினர் பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தை விஜய் பார்த்திருக்கிறார். படத்தை பார்த்த விஜய், சிபிராஜை அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார். விஜய் பாராட்டியதை தனது டுவிட்டர் பக்கத்தில் சிபிராஜ் பதிவு செய்திருக்கிறார். மேலும் ரசிகனாக பெருமைபடுகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
விஜய்யின் தீவிர ரசிகரான சிபிராஜுக்கு, இந்தப் பாராட்டு மறக்க முடியாத பாராட்டாக அமைந்திருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online