MENUMENU

பிறந்த நாள் வாழ்த்து கூறி ஆர்யாவை கலாய்த்த திரிஷா

நடிகர் ஆர்யா தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இவருக்கு திரையுலகை சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை கூறினார்கள். இதில் நடிகை திரிஷாவும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அந்த வாழ்த்துச் செய்தியில் என் அன்புக்குரிய ஆர்யாவுக்கு இனிய பிறந்த வாழ்த்துக்கள். உன் வாழ்க்கையில் எப்போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இறுதியில் ஹக்ஸ் குஞ்சுமணி (Hugs Kunjumani) என்று குறிப்பிட்டு கலாய்த்திருந்தார்.

இதற்கு Thank you so much my Kunjumani என்று ஆர்யா பதில் அளித்துள்ளார். ஆர்யாவும் திரிஷாவும் ஜோடியாக ‘சர்வம்’ படத்தில் நடித்திருந்தார்கள். அப்போதிலிருந்து, ஆர்யாவை குஞ்சுமணி என்று தான் திரிஷா அழைத்து வருகிறாராம். அதனால் தான், இப்படி வாழ்த்து கூறியிருக்கிறார்.
ஆர்யா நடிப்பில் தற்போது உருவாக இருக்கும் ‘கஜினிகாந்த்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online