MENUMENU

தனுஷின் தோட்டாவை தயார் செய்யும் கவுதம் மேனன்

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா’.
தனுஷ் – மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. பின்னர் கவுதம் மேனன் `துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பிலும், தனுஷ் வடசென்னை படப்பிடிப்பிலும் பிசியாகி விட்டனர்.

கவுதம் மேனன் இயக்கும் `துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மீதமுள்ள காட்சிகளை படமாக்க கவுதம் முடிவு செய்திருந்தார். அதன்படி `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.
டிசம்பருக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கும் கவுதம் மேனன் படத்தை வருகிற பிப்ரவரியில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
காதல் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ராணா, சுனைனா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். கவுதம் மேனனின் ஒன்ராகா எண்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் இணைந்து தயாரிக்க்கும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசைமைத்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online