`மெர்சல்’ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.<
/div>
விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படம் குறித்து சமீபத்தில் சில தகவல்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வந்தது. அதில் இந்த படத்தில் விசாயம் முக்கிய பங்கு வகிப்பதாகவும், படத்திற்கு தலைப்பு கலப்பை என்று வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் இதில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்தில் விஜய் முதல்முறையாக ஊனமுற்றவராக நடிப்பதாகவும் இணையதளங்களில் வைரலாகியது.
ஆனால் இந்த தகவல்களை படக்குழு மறுத்துள்ளதாக புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

விஜய் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும், மெர்சல் படத்தை தொடர்ந்து இந்த படத்துக்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.