MENUMENU

சன்னி லியோன் படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா?

பாலிவுட்டில் கலக்கி வரும் சன்னி லியோன் தமிழில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். சரித்திர பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். ஸ்டீவ்ஸ் கார்னர் நிறுவனத்திற்காக பொன்சே ஸ்டீபன் தயாரிக்கின்றார்.

இந்த படத்தில் பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் அசத்தவுள்ளனர். இவர்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. தற்பொழுது, இப்படத்தின் இசையமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் அம்ரிஷ். தற்போது ‘பாஸ்கர் தி ராஸ்கல்’, ‘யங் மங் சங்’, ‘கர்ஜனை’, ‘சார்லி சாப்ளின் 2’ ஆகிய படங்களுக்கு இவர் இசையமைத்து வருகிறார்.

 

 

இந்த பிரம்மாண்ட சரித்திர படம் குறித்து இசையமைப்பாளர் அம்ரிஷ் கூறும்போது, ”இயக்குனர் வடிவுடையான் அவர்கள் இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னபொழுது வியந்து போனேன். அருமையான கதையம்சம் கொண்ட மிக பிரம்மாண்ட படம் இது. இது போன்ற ஒரு சரித்திர பின்னணியுள்ள படத்திற்கு இசையமைப்பது ஒரு சவாலான காரியமாகும்.

இப்பட பாடல்கள் ரெக்கார்டிங்கிற்கு வெளிநாடு செல்லவுள்ளோம். பண்டைய கால இசை கருவிகள் பலவற்றை பயன்படுத்தி புது விதமான ஒலியை கொண்டுவரவுள்ளேன். எல்லோராலும் ரசிக்கப்பட்டு பேசப்படும் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அமைக்க முனைப்போட்டுள்ளேன். சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதால் இந்த படத்திற்கு இந்திய அளவில் ஒரு பெரிய ரீச் கிடைப்பது நிச்சயம். இந்த படத்திற்கு இசையமைக்க மிகவும் எதிர்நோக்கியுள்ளேன்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online