அடுத்தடுத்து விஜய் சேதுபதியின் இரு படங்களை வாங்கிய பிரபல நிறுவனம்

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ‘96’.

`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி – த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.<

/div>

காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், விஜய் சேதுபதி 16, 36, 96 வயதுள்ள 3 கெட்-அப்களில் நடிக்கிறார். இந்த 3 வேடங்களிலும் தனித்தன்மையை காட்டுலார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு கதாபாத்திரத்தில் போட்டோகிராபராக நடிக்கிறார்.
கோவிந்த் மேனன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.
படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருக்கிறது. சமீபத்தில் விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் தொலைக்காட்சி உரிமையையும் சன் டிவி கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக விஜய் சேதுபதியின் இரு படங்களை ஒரே நிறுவனம் அடுத்தடுத்து கைப்பற்றியிருப்பது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online