MENUMENU

ராணாவுடன் காதல் – ரகுல் பிரீத்திசிங் விளக்கம்

‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் – அனுஷ்கா காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. அதை அனுஷ்கா சமீபத்தில் நேரடியாகவே மறுத்தார். “நாங்கள் நண்பர்கள் எனக்கு பிடித்தமானவர் அமையும் நேரத்தில் திருமணம் நடக்கும். இப்போது, திருமணம் பற்றி நினைக்கவில்லை” என்று கூறினார். இந்த நிலையில் ‘பாகுபலி’ வில்லன் ராணாவும் ரகுல் பிரீத்தி சிங்கும் காதலிப்பதாக கிசுகிசு பரவி வருகிறது. இது பற்றி கேட்ட போது பதில் அளித்த ரகுல் பிரீத்திசிங்…

“நானும், ராணாவும் நெருங்கிய நண்பர்கள். எங்கள் நண்பர் குழுவில் 20 பேர் இருக்கிறோம். அவர்களில் ஒரு சிலர் தான் திருமணம் ஆகாதவர்கள். எனவே, திருமணம் ஆகாத நாங்கள் சந்தித்து பேசிக்கொள்வதை பார்ப்பவர்கள், இது போன்ற கிசுகிசுக்களை பரப்பி வருகிறார்கள். நானும் ராணாவும் இதைப் பார்த்து சிரித்துக் கொள்வோம்” என்றார்.
தெலுங்கில் பல படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத்திசிங் தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தியுடன் நடித்தார். அடுத்து சூர்யாவுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மீண்டும் கார்த்தியுடன் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online