MENUMENU

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விக்ரமின் துருவ நட்சத்திரம்

`ஸ்கெட்ச்’ படத்தை தொடர்ந்து விக்ரம் தற்போது `துருவ நட்சத்திரம்’ மற்றும் `சாமி ஸ்கொயர்’ படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

கவுதம் மேனனின் கனவு படமான இதில் விக்ரம் ஜோடியாக ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் வில்லன் யார் என்பது குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், மலையாள நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
படத்தின் முக்கால்வாசி காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது இரவு நேரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தொடர்ந்து இரு வாரங்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இரு படங்களை முடித்த பிறகு விக்ரம் `மஹாவீர் கர்ணா’ படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online