கங்கனா ரனாவத் நடித்த மணிகர்னிகா படத்துக்கு எதிரான பிராமனர்கள் போராட்டம் வாபஸ்

ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான கிரிஷ் 3 படத்தில் நடித்தவர் கங்கனா ரனாவத். இவர் தற்போது டைரக்டர் கிரிஷ்சின் இயக்கத்தில் ‘மணிகர்னிகா: தீ குயின் ஆப் ஜான்சி’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஜான்சி ராணி லட்சுமிபாயின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில், கங்கனா ரனாவத் ஜான்சி ராணியாக நடித்துள்ளார்.

இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.
இந்நிலையில், இந்த படத்தில் ஜான்சி ராணி லட்சுமிபாயின் கதாபாத்திரம் தவறாக சித்தரக்கப்பட்டுள்ளதாக சர்வ பிராமின் மகாசபை என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டினர். அதிலும் இந்த படத்தில் ராணிக்கும், பிரிட்டிஷ் படையை சேர்ந்த ஒருவருக்கும் இடையே காதல் ஏற்படுவது போல படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அந்த படத்தை திரையிட கூடாது என வலியுறுத்தி அந்த அமைப்பினர் போராட்டத்தை அறிவித்தனர்.
இந்நிலையில், போராட்டக்குழுவினரை சந்தித்த படக்குழுவினர் படத்தில் ராணியின் வாழ்க்கை வரலாறு தவறாக சித்தரிக்கபடவில்லை என உறுதி அளித்தனர். இதையடுத்து மணிகர்னிகா படத்துக்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சர்வ பிராமின் மகாசபை அமைப்பினர் இன்று அறிவித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online