MENUMENU

சிம்பு இடத்தை பிடித்த மாதவன் – கவுதம் மேனனின் அதிரடி மாற்றம்

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா, நடிப்பில் வெளியான படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. 2010-ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். காதலர்கள் மத்தியில் மிகவும் கொண்டாடப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.

சமீபத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் 2-ம் பாகம் குறித்து விழா ஒன்றில் பேசிய கவுதம் மேனன். ”விண்ணைத்தாண்டி வருவாயா 2′-ம் பாகம் உருவாக இருப்பதாகவும், இப்படத்தில் கார்த்தி மறுபடியும் ஜெஸ்ஸியை 7 ஆண்டுகள் கழித்து சந்திப்பது தான் கதைக்களமாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’-ம் பாகத்தில் சிம்புவுக்கு பதிலாக மாதவன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை மாதவன் தன் டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
மாதவனின் சினிமா பயணத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கவுதம் மேனன் – மாதவன் கூட்டணியில் வெளியான ‘மின்னலே’ சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online