MENUMENU

மகள் நடித்த படத்தை பார்க்காமல் இறந்த ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி, ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான போனிகபூரை திருமணம் செய்தார். இதனால் போனிகபூர் முதல் மனைவி மோனாவை பிரிந்து ஸ்ரீதேவியுடன் சென்றார். இதற்கிடையே போனிகபூர்-மோனா தம்பதியினர் அப்போது, அவருடைய மகன் அர்ஜுன்கபூர் நடிகரானார். அவருடைய படம் திரைக்கு வர ஒரு மாதம் இருக்கும்போது, மகன் நடித்த முதல் படத்தை பார்ப்பதற்கு முன்பே முதல் மனைவி மோனாகபூர் மரணம் அடைந்தார்.

தற்போது, ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இன்னும் ஒரு மாதத்தில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீதேவியும் மரணம் அடைந்துள்ளார். படத்தில் நடிப்பதற்காக மும்பையில் இருந்த ஜான்வி தாய் இறந்த செய்தியை அறிந்ததும் கதறி துடித்தார். ஸ்ரீதேவி தனது மகள் நடித்த முதல் படத்தை பார்ப்பதற்கு முன்பே இறந்துவிட்டார்.
போனிகபூரின் முதல் மனைவி இறந்த பிறகு அவருடைய மகன், மகள் ஸ்ரீதேவியின் 2 மகள்கள் என 4 பேரையும் ஸ்ரீதேவி பராமரிக்கும் நிலை ஏற்பட்டது. இப்போது ஸ்ரீதேவி மறைவு போனிகபூரையும், 4 குழந்தைகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online