MENUMENU

என் அம்மாவின் புனிதமான அன்பை களங்கப்படுத்தாதீர்கள்- ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உருக்கம்

இந்திய நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24-ம் தேதி துபாயில் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் காலமானார். இது இந்திய மக்கள் மற்றும் ஸ்ரீதேவி குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது பிறந்தநாளான இன்று தனது தாயின் நினைவுகளை சமூக ஊடகத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார். அதில் ஜான்வி கூறியதாவது:-

என்னுடைய பிறந்தநாளில் நான் கேட்டுக்கொள்வது ஒன்று மட்டும் தான். அனைவரும் உங்கள் பெற்றோர் மீது அன்பு செலுத்துங்கள். அவர்கள் தான் உங்களை உருவாக்கினார்கள். மேலும் என்னுடைய தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்ளுங்கள். என் பெற்றோர்கள் இடையேயான அன்பு மிகவும் புனிதமானது. அவர்கள் அன்பை களங்கப்படுத்தாதீர்கள். அவர் மிகச்சிறந்த நடிகை, தாய் மற்றும் மனைவி. அவர் தன் மீது அன்பு வைப்பவர்கள் மீது அதிக அன்பு செலுத்துவார்.

என் அம்மா எனக்கு சிறந்த தோழி. அவர் தான் என் வாழ்க்கை. அவரின் இறப்பு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இனி அவர் இல்லாமல் வாழ கற்றுக்கொள்வேன்.

அம்மா என்னை கவலை மற்றும் வலியிலிருந்து நீங்கள் பாதுகாத்து வந்தது எனக்கு தெரியும். உங்களை பெருமைப்படுத்தும் விதமாக நடந்து கொள்வேன். அதே எண்ணத்தில் இனி ஒவ்வொரு காலைப்பொழுதிலும் கண்விழிப்பேன். உங்கள் நினைவுகள் என்னை மிகவும் வலிமையாக்குகிறது. இருப்பினும் நீங்கள் இல்லாத குறையை யாராலும் ஈடு செய்ய முடியாது.

இவ்வாறு ஜான்வி கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online