MENUMENU

நீயா 2 – நாகப்பாம்பாக மாறும் வரலட்சுமி

கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் `நீயா’. 39 வருடங்களுக்கு பிறகு `நீயா 2′ என்ற பெயரில் படம் தயாராகி வருகிறது. கதைக்கு தேவைப்பட்டதால் `நீயா2′ என்று பெயர் வைத்துள்ளதாக படத்தின் இயக்குநர் எல்.சுரேஷ் தெரிவித்திருக்கிறார்.

இந்த படத்தில் 22 அடி நீளம் கொண்ட ராஜநாகம் முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறும்டியாக படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றத்தை முடிவு செய்ய கேமராமேனும் இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தேடியதாக சுரேஷ் கூறியிருக்கிறார். இறுதியாக பேங்காக்கில் ஒரு ராஜநாகத்தை பார்த்தோம். அதன் அமைப்பு, உடல் மொழி, தன்மை என அனைத்தையும் பார்த்தும், கேட்டும் தெரிந்துகொண்டோம். படம் முழுக்க வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக இதன் காட்சிகள் அமைந்துள்ளது.
படத்தின் நாயகனாக வித்தியாசமான வேடத்தில் ஜெய் நடிக்கிறார். ஜெய் இரண்டு வித பரிமாணத்திலும், பாம்பு பெண்ணாக வரலட்சுமியும் நடிக்கின்றனர். மேலும் ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா நாயகியாக நடிக்கிறார்கள். பாலசரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கி, தொடர்ந்து தலக்கோணம், சென்னை, மதுரை, கொடைக்கானல், சாலக்குடி பகுதிகளில் நடைபெறுகிறது. அழுத்தமான காதல் கதையுடன், காமடி கலந்த ஹாரர் படமாக உருவாகும் இந்த படத்தை ஜம்போ சினிமாஸ் சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரிக்கிறார்.
ஷபிர் இசையமைக்கும் இந்த படத்திற்கு இராஜவேல் மோகன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தின் தலைப்புடன் கூடிய முதல் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online