MENUMENU

விஜய் 62 படத்தில் திருப்புமுனை கதாபாத்திரத்தில் வரலட்சுமி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 62-வது படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் கதாநாயகியாக கீர்த்திசுரேஷ் நடித்து வருகிறார்.

வில்லன் வேடத்தில் பழ.கருப்பையா, ராதாரவி நடிக்கிறார்கள். இவர்களுடன் யோகிபாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சரத்குமார் மகள் வரலட்சுமியும் இந்த படத்தில் இணைந்துள்ளார். அவரது பிறந்த நாளில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது அவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் அவருக்கு முக்கியத்துவமான வேடம் என்று கூறப்படுகிறது. திருப்புமுனை ஏற்படுத்தும் வில்லத்தனம் கலந்த பாத்திரமாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online