MENUMENU

துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துக் கொள்கிறாரா அஜித்?

பைக்ரேஸ், கார்பந்தயம் ஆகியவற்றில் அதிக விருப்பம் உள்ளவர் அஜித். இதில் பல்வேறு சாதனைகள் படைத்து இருக்கிறார். சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்குவதாக இருந்தது. படத்தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக அது தள்ளிப்போகிறது. நயன்தாரா மீண்டும் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் இந்த படம் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், சமீபகாலமாக துப்பாக்கி சுடுவதில் அஜித் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். துப்பாக்கி சுடுவதற்கு முறையான பயிற்சி பெற்று வருகிறார். தொடர்ந்து இதற்கான பயிற்சிகளில் ஈடுபடுகிறார்.
விரைவில் அவர் மாநில, தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்க முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
‘விஸ்வாசம்’ படத்தில் தத்ரூபமாக துப்பாக்கி சுடும் காட்சிகள் அமைய வேண்டும் என்பதற்காக பயிற்சி பெறுகிறாரா? அல்லது பைக், கார்பந்தயம் போல துப்பாக்கி சுடுவதிலும் சாதனை படைக்க விரும்புகிறாரா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online