MENUMENU

சாமி-2 படத்துக்காக உருவாகும் பழைய நெல்லை

நடிகர் விக்ரம், திரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான சாமி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார்.

தற்போது சாமி 2-ம் பாகம் தயாராகி வருகிறது. விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ளது. சாமி முதல் பாகத்தில் திருநெல்வேலி அல்வாடா பாடல் மற்றும் சண்டை காட்சிகள் நெல்லை நகரத்தில் உள்ள தெருவில் படமாக்கப்பட்டது.
அதே தெருவில் சாமி-2 படத்துக்காக பாடல் மற்றும் சண்டை காட்சி எடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த தெரு தற்போது 15 ஆண்டுக்கு முன்பு இருந்தது போல் இல்லை. பல மாற்றங்களுடன் உள்ளது. இதனால் நெல்லை புறநகர் பகுதியில் சாமி முதல் பாகத்தில் இடம் பெற்ற தெருவை போலவே செட் அமைத்து பாடல் மற்றும் சண்டை காட்சிகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது.
15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தெருவை போல் செட் அமைத்து உருவாக்குகிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online