MENUMENU

செல்ல குழந்தைக்கு சின்ன அறிவுரை வழங்கிய கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து தீவிரமாக அரசியல் பிரவேசம் செய்து வருகிறார். பல ஊர்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து அவர்களிடம் உரையாடி வருகிறார்.

ஒரு பக்கம் அரசியல் பிரவேசம் செய்து வந்தாலும், தான் நடித்துள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தின் பின்னணி வேலைகளையும் கவனித்து வருகிறார். மேலும் சங்கர் இயக்கத்தில் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்திற்கும் தயாராகி வருகிறார்.
இந்நிலையில், கமலின் இளைய மகளான அக்‌ஷரா ஹாசனுக்கு சின்ன அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அதில், ஜிம்மில் என் குழந்தையுடன் உடற்பயிற்சி செய்கிறேன். உடற்பயிற்சி செய்தால், உன் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். வலுவான உடல், வலுவான சிந்தனையை கொடுக்கும் என்று அக்‌ஷரா ஹாசனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online