
கடந்த மார்ச் 2ம் தேதி ஹோலி பண்டிகையை முன்னிட்டு ‘பரி’ திரைப்படம் வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் ரூ.40 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ‘பரி’ படத்தின் கதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக இருக்கும் என கருதி இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய படத்தின் தயாரிப்பு குழு முடிவு செய்துள்ளனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அப்படி ரீமேக்காகும் பட்சத்தில் அனுஷ்கா ஷர்மா வேடத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.