MENUMENU

தளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 62 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், பட அதிபர்கள் போராட்டத்தால் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. சமீபத்தில் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தியதால் சர்ச்சை எழுந்தது.

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படத்திற்கு இசையமைப்பதில் ஏ.ஆர்.ரகுமான் மும்முரமாக ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் ஒரு பாடலை பாலிவுட் பாடகர் விபின் அனிஜா பாடுவதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்நிலையில், மற்றொரு பாடல் ஒன்றை நடிகர் விஜய் பாடவிருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்த தகவல் குறித்து நடிகர் விஜய்க்கு நெருங்கிய வட்டாரத்தில் கேட்ட போது, இந்த தகவலை அவர்கள் மறுத்தனர். படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்திருப்பதால், அதற்கான பணிகள் பிசியாக நடந்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமானும் பிசியாக இசையமைத்து வருகிறார். எனவே விஜய் இந்த படத்தில் பாட வாய்ப்பில்லையாம்.
இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பழ.கருப்பையா, ராதாரவி வில்லனாக நடிக்கின்றனர். படத்தை வருகிற தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online