MENUMENU

நரகாசூரன் வெளியாகுமா? கார்த்திக் நரேன் போட்ட டுவிட்டால் பரபரப்பு

‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். வித்தியாசமான கதைக்களம் கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. இப்படத்தை அடுத்து தற்போது அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா நடிப்பில் ‘நரகாசூரன்’ படத்தை இயக்கியுள்ளார்.</

div>

கவுதம் மேனன் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கார்த்திக் நரேன் ‘நாடக மேடை’ படத்தை இயக்க தயாராகி விட்டார்.
சில தினங்களுக்கு முன்பு கார்த்திக் நரேன், ‘சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களைக் கொன்றுவிடும். ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். அப்படி தவறான நம்பிக்கை வைத்தால், உங்கள் கனவு எல்லாத் திசைகளில் இருந்தும் சிதைந்து போவதை நீங்கள் கண்ணால் காண நேரிடும்” என டுவிட்டரி பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் கவுதம் மேனன், ‘ஒரு வீடியோவை பாராட்டி பதிவு செய்திருக்கிறார். பின்னர், சில இளம் இயக்குனர்கள் படத்தை உருவாக்கி விட்டு அதைப் பற்றி புலம்பிக் கொண்டே இருகிறார்கள் என்று பதிவு செய்திருக்கிறார்.
இதைக் குறிப்பிட்டு கார்த்திக் நரேன், ‘பலர் என்னிடம் அறிவுரை கூறினாலும் நான் உங்களை நம்பினேன். ஆனால் என்னை நீங்கள் எங்களை குப்பை போல நடத்தினீர்கள். கடைசியில் நாங்களே முதலீடு செய்ய வேண்டியதாகிவிட்டது. தயவு செய்து இனி யாரையும் இப்படி ஏமாற்றாதீர்கள்” என கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் தயாரிப்பாளர் கவுதம் மேனனும், இயக்குனர் கார்த்திக் நரேனும் மோதிக் கொள்வதால், நரகாசூரன் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online