அனுஷ்கா

உடல் எடையை கூட்ட மறுத்த கீர்த்தி சுரேஷ்

தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 1970-களில் புகழின் உச்சத்தில் இருந்தவர், ‘நடிகையர் திலகம்’ சாவித்ரி. இவருடைய வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில், தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இதில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

முதல் 10 இடங்களில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா

பிரபல இணையதளம் பட்டியலை பிரபல இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டிருக்கிறது.

நீண்ட நாள் காதலி அனுஷ்காவை கரம்பிடித்தார் விராட் கோலி: இத்தாலி ரிசார்ட்டில் திருமணம் நடந்தது

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இதனால் அவர்கள் காதல் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களின் திருமணம் தொடர்பான பல்வேறு செய்திகள் வெளியானவண்ணம் இருந்தன.

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்

பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டு நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கிற தமிழ்ப்படம் அகிலாண்டகோடி ‘பிரமாண்ட நாயகன்.’ ராமா என்ற வேங்கடசபெருமாள் பக்தனின் உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்டு இப்படம் ஜனரஞ்சகமாக உருவாகியுள்ளது. இன்றைய நவீனமான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளத்தில் வைரலான அஜித்தின் புதிய வீடியோ

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் வி வரிசையில், அஜித் விஸ்வாசம் படத்தில் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் வரும் 2018 தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

படப்பிடிப்புக்கு தயாராகும் விஜய், அஜித், விக்ரம் படங்கள்

விஜய், அஜித்குமார், விக்ரம் ஆகியோர் புதிய படங்களில் நடிக்க தயாராகி உள்ளனர். இதர நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. இவற்றின் படப்பிடிப்புகளை விரைவில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். விஜய் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார்.

`விஸ்வாசம்’ படத்தில் அஜித் ஜோடியாகும் அனுஷ்கா

‘விவேகம்’ படத்தை தொடர்ந்து அஜித் – சிவா 4-வது முறையாக இணையும் படத்திற்கு `விஸ்வாசம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அனுஷ்காவின் புகைப்படம் ஏற்படுத்திய பரபரப்பு

‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக அனுஷ்கா எடையை அதிகரித்து குண்டு ஆனார். பின்னர் உடற்பயிற்சி, யோகா, உணவு குறைப்பு என்று பல்வேறு முயற்சிகள் எடுத்தார். ஆனால் பலன் இல்லை.

பாகுபலி 3 எடுக்கிறாரா ராஜமௌலி?

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ படங்கள் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வசூலில் அதிக சாதனை படைத்தது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அடுத்ததாக ராஜமௌலி யாரை வைத்து படம் இயக்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிரபாஸ் உருவத்தை முதுகில் டாட்டூ குத்திய ரசிகை!

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, நாசர், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவான பிரமாண்ட படம் ‘பாகுபலி’. இந்தப் படம் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்த பிரபாஸுக்கு ரசிகைகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

அனுஷ்காவின் அடுத்த பிரமாண்ட படத்தின் புதிய அப்டேட்

பாகுபலி-2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அனுஷ்கா பாக்மதி என்ற படத்திலும் நடித்து வந்தார்.

`துருவ நட்சத்திரம்’ படக்குழுவில் இருந்து வெளியான புதிய தகவல்

கவுதம் மேனன் தற்போது விக்ரமை வைத்து `துருவ நட்சத்திரம்’ படத்தை உருவாக்குவதில் பிசியாக இருக்கிறார். அதேநேரத்தில் தாமதமாகியிருக்கும் தனுஷின் `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பு சுமார் 15 நாட்கள் எடுக்கப்பட வேண்டி இருக்கிறது.

மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் அனுஷ்கா

கவுதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அனுஷ்கா. இப்படத்திற்கு மீண்டும் கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் அனுஷ்கா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பணத்துக்காக படங்களில் நடிக்க மாட்டேன்: அனுஷ்கா

நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:- “நல்ல கதாபாத்திரங்களில் நடித்து திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு நடிகைகளுக்கு அமைய வேண்டியது முக்கியம். என்னை விட திறமையான நடிகைகள் இருந்தும் அதிர்ஷ்டவசமாக எனக்கு நல்ல கதைகள் கிடைத்தன. அதனால்தான் திறமை காட்ட முடிந்தது. சினிமாவுக்காக உயிரை பணயம் வைத்து உழைக்கும் இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் படங்களில் பணியாற்றும் வாய்ப்பு …

நிச்சயதார்த்தம் செய்வதாக பிரபாஸ்-அனுஷ்கா பற்றி வதந்தி – போலீசில் புகார்

தெலுங்கு நடிகர் பிரபாசும், நடிகை அனுஷ்காவும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். ‘பாகுபலி-2’ படத்துக்குப் பிறகு பிரபாசும், அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின. இதை இருவரும் மறுத்தனர். நாங்கள் நல்ல நண்பர்கள். திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று அறிவித்தனர்.

திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா

‘பாகுபலி-2’ படத்துக்குப் பிறகு பிரபாஸ் – அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை அவர்கள் மறுத்தனர்.

அனுஷ்காவை கைவிட்டு பாலிவுட் நடிகையுடன் கைகோர்த்த பிரபாஸ்

‘பாகுபலி-2’ க்கு பிறகு பிரபாஸ் நடிக்க இருக்கும் படம் ‘சாஹோ’. இது தமிழ்,தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகிறது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

அனுஷ்காவை திருமணம் செய்யும் எண்ணமில்லை: பிரபாஸ் பேட்டி

பாகுபலி படத்துக்கு பிறகு நடிகர் பிரபாஸ் மிகவும் பிரபலமாகி விட்டார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். தற்போது ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தயாராகிறது.

ஷாருக்கான் – அமீர்கான் எப்படி? அனுஷ்கா ஷர்மா விளக்கம்

அனுஷ்கா சர்மா நடித்துள்ள ‘ஜப்ஹேரி மெட் சீஜல்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய ஷாருக்கான், “உண்மை வாழ்க்கையில் காதல் வி‌ஷயத்தில் நான் மிகவும் கூச்ச சுபாவம் உடையவன்” என்றார்.

எந்த நேரத்திலும் சூர்யாவுடன் நடிக்க தயாராக இருக்கிறேன்: சாய்பல்லவி

மலையாளத்தில் தயாரான ‘பிரேமம்’ படத்தில் நடித்து தென் இந்திய பட உலகில் பிரபலம் ஆனவர் சாய்பல்லவி. முதல் படத்திலேயே ‘மலர் டீச்சர்’ என்று அவரை ரசிகர்களும் கொண்டாடினார்கள். இது போல தெலுங்கிலும் அறிமுகமான முதல் படத்திலேயே பானுமதி என்ற அவரது பாத்திரம் பேசப்பட்டது. அங்கும் ரசிகர்களுக்கு பிடித்த நடிகை ஆனார்.

`சங்கமித்ரா’ பிரம்மாண்ட படத்தில் சத்யராஜ்?

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாகி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் `பாகுபலி’-2. வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள `பாகுபலி’ படத்தின் இரண்டாவது பாகம் உருவாகுவதற்கு சத்யராஜின் கட்டப்பா கதாபாத்திரம் முக்கிய காரணமாக அமைந்தது.

`பாகுபலி’ கூட்டணி உடைந்தது

`பாகுபலி’ படத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் இடம் பிடித்துள்ள பிரபாஸ் அடுத்ததாக `சாஹு’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதைகளத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

அனுஷ்கா – ரம்யாகிருஷ்ணன் மோதல்

`பாகுபலி’ படத்தில் அனுஷ்காவும் – ரம்யா கிருஷ்ணனும் கடுமையாக மோதிக் கொண்டது பழையகதை. மீண்டும் கடுமையாக மோதிக்கொண்டது புதுக்கதை. இப்போது இவர்கள் மோதலில் ஈடுபட்டது நாகார்ஜுனா யாருக்குச் சொந்தம் என்பதற்காக….

தமிழ்த் திரைப்படங்களுக்கான தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு

தமிழ் திரைப்படங்களுக்கான மாநில அரசின் விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். ஆனால், கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து விருதுகள் அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், தமிழ் திரைப்படங்களுக்கான மாநில அரசின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

ராஜமவுலியின் அடுத்த படத்தின் கதாநாயகனாக போட்டி போடும் நடிகர்கள்

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான `பாகுபலி 2′ திரைப்படம், திரையிடப்பட்ட இடங்கள் அனைத்திலும் நல்ல வசூலை குவித்தது. படத்தில் மிக பிரமாண்டமான காட்சிகளும், சிறப்பான ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது.