நயன்தாரா

ஜல்லிக்கட்டு போராட்டக்களத்தில் நடிகை நயன்தாரா

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினாவில் இளைஞர்கள் ஐந்தாவது நாளாக போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை களத்தில் குதித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஆரம்பித்த இப்போராட்டம் இந்தியா தாண்டி தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.

8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஷாலுடன் ஜோடி சேரும் நயன்தரா?

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நயன்தாரா. தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் பிசியாக இருக்கும் நயன், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளதால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.

வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கும் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, ஸ்ரேயா

கதாநாயகர்கள், தங்கள் படங்களில் உடம்பை ஏற்றியும் இறக்கியும் முகத்துக்கு ‘மேக்கப்’ போட்டு வித்தியாசப்படுத்தியும் கஷ்டப்பட்டு நடித்து ரசிகர்களை கவர்வது உண்டு. கதாநாயகிகள் காதல் காட்சிகளுக்கும் பாடல் காட்சிகளில் அரைகுறை ஆடைகளில் வந்து நடனம் ஆடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டனர்.

உலகின் முக்கிய பிரச்சனையை எடுத்துக்கூறும் நயன்தாராவின் ‘அறம்’

மீஞ்சூர் கோபி இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படம் ‘அறம்’. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா ‘அறம்’ படத்தில் கலெக்டராக நடிக்கிறார்.

காதணி வடிவில் காதலை வெளிப்படுத்திய நயன்தாரா

நயன்தாரா பற்றிய காதல் ‘கிசுகிசு’க்களுக்கு பஞ்சமே இல்லை. என்றாலும் அவர் எதைப்பற்றியும் கவலைப்படுவது இல்லை. படத்தில் நடிப்பதில்தான் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

நயன்தாரா படத்துக்கு இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தம்

தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தற்போது ‘கொலையுதிர் காலம்’, ‘இமைக்கா நொடிகள்’, ‘அறம்’, ‘டோரா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

திறமையான நடிகைகளால் தான் சினிமாவில் நிலைக்க முடியும்: தமன்னா

ஐதராபாத்தில் நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:- “எனது கட்டுக்கோப்பான உடல் அழகுதான் எனக்கு ‘பலம்.’ சினிமாவில் அறிமுகமானதில் இருந்து ஒரே மாதிரி தோற்றத்தில் இருக்கிறீர்களே? இதற்கு என்ன சாப்பிடுகிறீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள்.

திறமையான நடிகைகளால் தான் சினிமாவில் நிலைக்க முடியும்: தமன்னா சொல்கிறார்

“நயன்தாரா, திரிஷா, கரீனாகபூரை போன்று திறமையான நடிகைகளால்தான் சினிமாவில் நிலைக்க முடியும்” என்று தமன்னா கூறினார்.

தமிழ் படத்தில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க முயற்சி

இந்தி பட உலகின் மூத்த நடிகர் அமிதாப்பச்சன். பலமுறை தமிழ்படங்களில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். என்றாலும், அதற்கான வாய்ப்பு இதுவரை அவருக்கு அமையவில்லை. இப்போது அதற்கான முயற்சி நடந்து வருகிறது.

தமிழ் படத்தில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க முயற்சி

இந்தி பட உலகின் மூத்த நடிகர் அமிதாப்பச்சன். பலமுறை தமிழ்படங்களில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். என்றாலும், அதற்கான வாய்ப்பு இதுவரை அவருக்கு அமையவில்லை. இப்போது அதற்கான முயற்சி நடந்து வருகிறது.

நடிகைகள் குறித்து ஆபாசமான விமர்சனம்: மன்னிப்பு கேட்ட இயக்குனர் சுராஜ்

விஷால் – தமன்னா ஜோடியாக நடித்த ‘கத்திச்சண்டை’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை சுராஜ் டைரக்டு செய்துள்ளார். இதில், தமன்னா கவர்ச்சியாக நடித்துள்ளதாக சுராஜ் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பரபரப்பான நடிகையாக வலம் வரும் நயன்தாரா

ஜெயராம் நடித்த ‘மனசினக்கரே’ மலையாள படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. அந்த படம் 2003-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி வெளியானது. இப்போது அவர் திரை உலகில் 13-வது ஆண்டில் காலடி பதித்திருக்கிறார். ஆண்டுகள் ஓடினாலும் அவருக்குள்ள நாயகி அந்தஸ்து இன்று வரை குறையவில்லை.

நயன்தாராவைத் தொடர்ந்து திரிஷாவுக்கு ஜோடியான விஜய் சேதுபதி

விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டு 6 படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. இதில் பெரும் பாலான படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. அடுத்து ‘புரியாத புதிர்’ ‘கவண்’ உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.

இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா குழந்தையாக பேபி மானஸ்வி

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. இதில் நயன்தாரா தம்பியாக அதர்வா நடிக்கிறார். இந்த படத்தில் போலீசாக வரும் நயன்தாரா 4-வயது குழந்தையின் அம்மாவாகவும் நடிக்கிறார்.

பார்த்திபன் படத்தில் சிம்ரன்

விஜய் நடித்த ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் 1992-ல் அறிமுகமானவர் சிம்ரன். பின்னர் தமிழ்திரை உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். என்றாலும் திருமணத்துக்குப்பிறகு நாயகி வாய்ப்பு வரவில்லை.

இமைக்கா நொடிகள் அப்டேட்: மேக்கப் இல்லாமல் நடிக்கும் நயன்தாரா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா தற்போது ‘டோரா’, ‘இமைக்கா நொடிகள்’, ‘அறம்’, ‘கொலையுதிர்காலம்’ உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘அறம்’ படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்து வருகிறார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய ஸ்டுடியோவில் தொடங்கும் விஜய் – அட்லி படம்

விஜய் தற்போது ‘பைரவா’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்த பிறகு அட்லியின் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கவிருக்கிறார்.

மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்

மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி அனைவருடைய வரவேற்பையும் பெற்ற படம் ‘காக்கா முட்டை’. இதில் சிறுவர்கள் விக்னேஷ்-ரமேஷ் இருவரும் அந்த படத்தில் பெரிய காக்கா முட்டை, சின்ன காக்கா முட்டை என்ற பெயரில் அண்ணன்-தம்பியாக நடித்தார்கள்.

சம்பளத்துக்கு வரி கட்ட தயாரிப்பாளர்களை வற்புறுத்தும் நயன்தாரா – அனுஷ்கா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களை உள்ளடக்கிய தென்னிந்திய திரையுலகில் 10-க்கும் மேற்பட்ட முன்னணி கதாநாயகிகள் உள்ளனர். ஒன்றிரண்டு படங்களில் நடித்து மார்க்கெட் இழந்த கதாநாயகிகள் பட்டியலில் 50-க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். வளர்ந்த கதாநாயகிகள் பலரின் சம்பளம் படத்துக்கு படம் மாறுபடும். படம் வெற்றி பெற்றால் சம்பள தொகை ஏறுவதும், தோல்வி அடைந்தால் இறங்குவதும் வழக்கம்.

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளித்த நயன்தாரா

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர பல நடிகர்களும் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். பல தயாரிப்பாளர்களும் நயன்தாராவை வைத்து படம் தயாரிக்க ஆர்வம் காண்பிக்கின்றனர்.

கணவரை விவாகரத்து செய்ய முடிவா? வித்யாபாலன் விளக்கம்

மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வேடத்தில் ‘த டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்து பிரபலமானவர், வித்யாபாலன். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது. குரு, உருமி போன்ற தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

நயன்தாராவின் 55-வது படத்தின் தலைப்பு வெளியாகும் தேதி அறிவிப்பு

நயன்தாரா நடிப்பில் இந்த வருடம் வெளியான ‘இருமுகன்’, ‘காஷ்மோரா’ படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து மீஞ்சூர் கோபி இயக்கும் புதிய படத்திலும், ‘டோரா’ என்ற படத்திலும் நயன்தாரா பிசியாக நடித்து வருகிறார். இதில், மீஞ்சூர் கோபி இயக்கும் படத்திற்கு இதுவரை தலைப்பு வைக்கப்படாமல் படப்பிடிப்பு நடத்தி வந்தனர்.

பெரிய கதாநாயகர்களுடன் ஜோடிசேர நயன்தாரா மறுப்பு

நயன்தாரா தமிழ், தெலுங்கு பட உலகில் நம்பர்-1 கதாநாயகியாக இருக்கிறார். இரு மொழிகளிலுமே முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார். அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நயன்தாரா நடித்து திரைக்கு வந்த அனைத்து படங்களுமே நல்ல லாபம் …

கமல், அஜித் இயக்குனருடன் கைகோர்க்கும் நயன்தாரா?

கமல் நடிப்பில் வெளிவந்த ‘உன்னைப்போல் ஒருவன்’, அஜித் நடிப்பில் வெளிவந்த ‘பில்லா -2’ ஆகிய படங்களை இயக்கியவர் சக்ரி டொலேட்டி. பிரம்மாண்டமாக உருவான இந்த இரு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதனால், சக்ரிக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் இல்லாமல் போனது.

அஜித் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகி?

அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘வேதாளம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். லட்சுமிமேனன், ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழில் வெற்றி பெற்ற இப்படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்ய முடிவு செய்தனர்.