தமிழ் சினிமா

என்னை மிரட்டிய அமானுஷ்ய சம்பவங்கள்: ராய் லட்சுமி பேட்டி

நடிகை ராய் லட்சுமி தொடர்ந்து பேய் படங்களில் நடித்து வருகிறார். ‘காஞ்சனா’ பேய் படத்தில் லாரன்சுடன் நடித்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது.

இரட்டை வேடத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா

பாபி சிம்ஹா நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படம் ‘உறுமீன்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரேஷ்மி மேனன் நடித்து வருகிறார். சக்திவேல் பெருமாள் சாமி இப்படத்தை இயக்கி வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் இடத்தை பிடித்த காஜல் அகர்வால்

கீர்த்தி சுரேஷ் நடித்த முதல்படமான ‘ரஜினி முருகன்’ படம் இன்னும் வெளிவரவே இல்லை. அதற்குள் இவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. சமீபத்தில், இவர் நடிப்பில் வெளிவந்த ‘இது என்ன மாயம்’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இருப்பினும் இவர் கைவசம் ஏகப்பட்ட படங்கள் உள்ளன.

இன்டர் நெட்டில் பரவும் பாலிவுட் நடிகையின் நிர்வாண படம்

இந்தி திரை உலகில் பிரபலமான நடிகை பிரீத்தி குப்தா. ‘சகானி’ இந்தி மெகா தொடர் மூலம் வட மாநில ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் நடித்த ‘அன்பிரீடம’ திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களின் ஓரின சேர்க்கை படமான இதில் முத்தகாட்சி, நெருக்கமான அரை நிர்வாண காட்சி ஆகியவை இடம் பெற்று இருந்தன.

தனுஷுக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்?

தனுஷ் தற்போது பிரபுசாலமன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிசட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார்.

சூர்யாவின் ஹைக்கூ பசங்க -2 வாக மாற்றம்

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி வருகின்ற புதிய படம் ‘ஹைக்கூ’. இப்படத்தின் தலைப்பு தமிழ் வார்த்தை இல்லை என்பதால் இந்த படத்திற்க்கு வரிவிலக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

விஜய் வழியை பின்பற்றும் விஷால்

விஜய் தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் தன்னுடைய ரசிகர் மன்றம் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவார். மேலும், அன்றைய தேதியில் பிறந்த குழந்தைகளுக்கு தன்னுடைய செலவில் தங்க மோதிரம் ஒன்றையும் அணிவிப்பார்.

பாயும் புலி படத்தின் தடை நீங்குமா?: பேச்சுவார்த்தை நடக்கிறது

விஷால், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளபடம் ‘பாயும் புலி’. சுசீந்திரன் டைரக்டு செய்துள்ளார். வேந்தர் மூவீஸ் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரத்தயாராகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந்தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில், ‘பாயும் புலி’ படத்துக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் திடீர் தடைவிதித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் விவாதம் நடத்தும் இஞ்சி இடுப்பழகி படக்குழுவினர்

ஆர்யா-அனுஷ்கா மீண்டும் இணைந்து நடித்து வரும் புதிய படம் ‘இஞ்சி இடுப்பழகி’. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தை பிரகாஷ் கொவேலமுடி இயக்குகிறார். காதலுடன் நகைச்சுவை கலந்த படமாக உருவாகிவரும் இப்படத்தில் சோனல் சௌஹன், பிரகாஷ்ராஜ், ஊர்வசி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஆஸ்கார் விருது போட்டியில் காக்கா முட்டை

இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்பப்பட இருக்கும் படங்களின் தேர்வு நடந்து வருகிறது. பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான அமோல் பாலேக்கர் தலைமையிலான குழு இதற்கான படங்களை தேர்வு செய்து வருகிறது.

மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வரும் சிம்பு

சிம்பு நடிப்பில் உருவான ‘வாலு’ படம் பல பிரச்சனைகளை சந்தித்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மூன்று வருடங்கள் கழித்து படம் வெளியானாலும் சிம்பு ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமைந்தது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு பிச்சைக்காரன் இருக்கிறான்: விஜய் ஆண்டனி

வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஜய் ஆண்டனி. வித்தியாசமான கதை மட்டுமல்லாமல் இவருடைய படத்தின் தலைப்பும் வித்தியாசமாகவே இருக்கும்.

மீண்டும் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய்?

விஜய், அஜித் இருவரின் கரியரில் முக்கியமான படங்களை தந்தவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித்துக்கு வாலி, விஜய்க்கு குஷி.

நல்ல கதை அமைந்ததால் மீண்டும் நடிக்கிறேன்: ஐஸ்வர்யாராய் பேட்டி

நடிகை ஐஸ்வர்யாராய் திருமணத்துக்குப்பிறகு நடிப்பதை குறைத்தார். கர்ப்பமானதும் தற்காலிகமாக விலகினார். குழந்தை பிறந்தபின் அதை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். தற்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு ‘ஜாஸ்பா’ என்ற இந்தி படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

சிவாஜிக்கு மணிமண்டபம்: தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னையில், தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.

பாயும் புலி படத்துக்கு தடை விதிப்பதா?: திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆமாம், ஆபாச படத்தில் இருப்பது நான்தான் – நடிகையின் துணிச்சல்

நடிகைகளின் ஆபாசப் படம் வெளியானால், அதில் இருப்பது நானில்லை என்று உடனடியாக சம்பந்தப்பட்ட நடிகையிடமிருந்து மறுப்பு வரும். பெரும்பாலும் அதுவேதான் உண்மையும்கூட. மார்பிங் மூலம் தலையை ஒட்ட வைக்கும் மார்பிங் மாஃபியாக்களின் வேலை இது.

ஸ்ரீதேவி புலி கபூர் – யாருப்பா இந்த புதிய நடிகை?

ஸ்ரீதேவி புலி கபூர். அது யார் புலி கபூர் என்று திகைக்க வேண்டாம். சமூக வலைத்தளத்தில் தனது பெயரான, ஸ்ரீதேவி போனி கபூரைத்தான் இப்படி புலி கபூராக மாற்றி வைத்துள்ளார், நடிகை ஸ்ரீதேவி.

பிறந்தநாளில் விஷால் எடுக்கும் புதிய சபதம்

விஷால் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள படம் ‘பாயும் புலி’ . இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். இதை தவிர பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் தற்போது நடித்து வருகிறார்.

தொடங்கிய இடத்திலேயே முடிவடைந்த தாரை தப்பட்டை பயணம்

‘பரதேசி’ படத்திற்கு பிறகு இயக்குனர் பாலா, சசிகுமார்-வரலட்சுமியை வைத்து ‘தாரை தப்பட்டை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். கரகாட்டத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இது, இவர் இசையமைக்கும் ஆயிரமாவது படமாகும்.

தனுஷ் படத்தில் வித்யாபாலன்?

தனுஷ் தற்போது ‘விஐபி-2’ படத்தை முடித்துவிட்டு, பிரபு சாலமன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து தனுஷ், துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

சிம்பு படத்தில் அனிருத்?

சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘வாலு’ படம் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து, கௌதம் மேனன், செல்வராகவன், பாண்டிராஜ் ஆகியோர் இயக்கும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சிம்பு, இயக்குனர் அமீர் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.