விசேட செய்தி

பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி சரத்குமார், சூர்யா மனு

சென்னையில் கடந்த 2009-ம் ஆண்டு விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். இதுகுறித்தும், மற்ற நடிகைகள் குறித்தும் ஒரு பத்திரிகையில் 3.9.2009 அன்று செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு சினிமா நடிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பத்திரிகையாளர்கள் அவமதிப்பு வழக்கு: சூர்யா உள்ளிட்ட 8 நடிகர், நடிகைகளுக்கு பிடிவாரண்ட்

கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் சினிமா உலகில் பெரும் புயலை கிளப்பியது. கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி தனது வாக்குமூலத்தில் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்று கூறியதாக சில ஊடங்கள் அந்த நடிகைகளின் படத்துடன் செய்தி வெளியிட்டது.

குடும்பத்துடன் வந்த ரசிகர்களுடன் ரஜினி இன்று திடீர் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை ரசிகர்களை சந்தித்தார். 5 நாட்களில் நடந்த சந்திப்பின்போது, தினமும் 3 மாவட்டம் வீதம் 15 மாவட்ட ரசிகர்களுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொண்டார். மாவட்டத்துக்கு 250 பேர் வீதம் படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

சூப்பர் ஸ்டாரை விமர்சித்த கஸ்தூரிக்கு ரஜினி ரசிகர்கள் தக்க பதிலடி

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சென்னைக்கு அழைத்து 5 நாட்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரசிகர்கள் மத்தியில் அரசியல் பிரவேசம் குறித்து அதிரடியான கருத்துக்களை வெளியிட்டார்.

தமிழகத்தில் அரசியல் கெட்டுப்போய் விட்டது: கடைசி நாளில் ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி – முழு விபரம்

தமிழக மக்களால் “சூப்பர் ஸ்டார்” என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடுவாரா? மாட்டாரா? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு கடந்த 20 ஆண்டுகளாக நிலவுகிறது.

ரஜினிகாந்த் மண்டையில் ஒன்றும் இல்லை: மார்க்கண்டேய கட்ஜு விளாசல்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களாக ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில், அவரது அரசியல் பயணம் குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வலுத்துள்ளது. ரஜினி தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று ஏராளமானோர் விரும்புவதால் அவர் 7 கோடி தமிழர்களை ஏமாற்ற மாட்டார் என்று அவரது …

எம்.ஜி.ஆர். போல ரஜினி முதல்வர் ஆவார்: கேரள ஜோதிடர் கணிப்பு

ரஜினியின் அரசியல் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி அவருக்கு நெருக்க மானவர்கள் கூறியதாவது:- கேரளாவில் இருக்கும் ஜோதிடர் ஒருவரிடம், ரஜினிக்காக அவரது நண்பர் ஒருவர் ஜாதகம் பார்த்திருக்கிறார். ரஜினி, அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நல்ல நேரம் வந்தாச்சு.

அரசியல் களத்தில் ரஜினி : தலைவா வா… தலைமை ஏற்க வா என ரசிகர்கள் அழைப்பு

நான் ஒரு தடவ சொன்னா… 100 தடவ சொன்ன மாதிரி. பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் பேசிய இந்த ‘பஞ்ச்’ டயலாக் பட்டி தொட்டியெங்கும் பிரபலம். 20 ஆண்டுகளை கடந்த பின்னரும் இப்போதும் ரஜினி பேசிய அந்த வசனத்தின் வீரியம் குறையாமல் அதே காரத்துடனேயே உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நான் அரசியலுக்கு வருவது குறித்து ஆண்டவன்தான் முடிவு செய்யவேண்டும்: ரசிகர்களிடையே ரஜினி பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக கடந்த மாதமே அறிவித்திருந்தார். ஆனால், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மே 15-ஆம் தேதி முதல் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

1 கோடி பார்வையாளர்களை பெற்று `விவேகம்’ டீசர் படைத்த புதிய சாதனை

`சிறுத்தை’ சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் `விவேகம்’ படத்தின் டீசர் புதிய மைல்கல்லை எட்டி தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த வியாழனன்று(11.5.17) நள்ளிரவு 12.01-க்கு வெளியான `விவேகம்’ படத்தின் டீசர் வெளியான 12 மணிநேரத்திலேயே முதலிடத்தில் இருந்த `கபாலி’ படத்தின் டீசர் சாதனையை முறியடித்திருந்தது.

ரஜினிகாந்துக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய ஹாஜி மஸ்தானின் மகன்

மும்பையில் பிரபல தாதாவாக விளங்கியவர் ஹாஜி மஸ்தான். இவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் கதையம்சம் கொண்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.

விஜய் பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு காத்திருக்கும் மற்றொரு விருந்து

விஜய் தற்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். சென்னை, மதுரையில் படமாக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் முக்கிய படப்பிடிப்பு தற்போது ஐரோப்பாவில் நடந்து வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்த `விவேகம்’ டீசர்

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் `விவேகம்’ படத்தின் டீசரால், சமூக வலைதளங்களில் நேற்று நள்ளிரவு ஆரம்பித்த கிடுகிடுப்பு இன்னமும் அடங்கவில்லை. எங்கு சென்றாலும் `விவேகம்’ என நகரின் சூடான தலைப்பாக மக்களால் பேசப்பட்டு வருகிறது. டீசரைப் பார்த்தவர்கள் அதை திரும்ப திரும்ப பலமுறை விரும்பி பார்க்கும் அளவுக்கு தல புயல் கடுமையாக வீசியுள்ளது என்று …

ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்: புகைப்படம் எடுக்கும் தேதியும் அறிவிப்பு

ரஜினிகாந்த் பல வருடங்களாக அவருடைய ரசிகர்களை நேரில் சந்திக்கவில்லை. எனவே, ரசிகர்களின் விருப்பப்படி கடந்த எப்ரல் மாதம் ரஜினி அவரது ரசிகர்களை சந்திக்க முடிவு செய்தார். இதற்காக ஏற்பாடுகள் நடந்தன. ஆலோசனை கூட்டமும் நடந்தது. ரஜினியை சந்திக்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

`பாகுபலி’க்கு போட்டியாக சீனாவில் ரூ.90 கோடியை அள்ளிய `தங்கல்’

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்து வரும் படம் `பாகுபலி-2′. `பாகுபலி’ படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் ரிலீசானது.

இன்னும் ஒரு சில நாட்களில் அடுத்த ரூ.1000 கோடி இலக்கை எட்டவிருக்கும் `பாகுபலி-2′

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்து வரும் படம் `பாகுபலி-2′. `பாகுபலி’ படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் ரிலீசானது.

இணையதளத்தில் பாகுபலி-2: கமி‌ஷனர் அலுவலகத்தில் விஷால் புகார்

‘பாகுபலி-2’ படம் கடந்த ஏப்ரல் 28-ந் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலேயே இப்படம் ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இணையதளத்திலும் வெளியானது. இதுகுறித்து, நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

சொன்ன தேதிக்கு முன்பாகவே ‘விவேகம்’ டீசர் ரிலீஸ்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வசூலில் இந்தியாவின் நம்பர்-1 இடத்தை பிடித்த ‘பாகுபலி-2’

இந்திய திரையுலகின் பல்வேறு சரித்திர சாதனைகளை ‘பாகுபலி-2’ படம் மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 28-ந் தேதி வெளிவந்த இந்த படம் 3 நாட்களில் ரூ.500 கோடியை வசூலித்து சரித்திர சாதனை படைத்தது.

இணையதளத்தில் அரை நிர்வாண படத்தை வெளியிட்ட ரியாசென்

பாரதிராஜாவின் ‘தாஜ்மகால்’ படம் மூலம் தமிழுக்கு வந்தவர் இந்தி நடிகை ரியாசென். பிரசாந்தின் ‘குட்லக்‘ படத்திலும் நடித்தார்.

இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனையை படைக்கப்போகும் பாகுபலி-2

இந்தியாவில் சினிமாவுக்கு வயது 100 ஆகிவிட்டது. இருந்தாலும், இதுவரை எந்தவொரு இந்தியா சினிமாவும் நிகழ்த்தாத ஒரு சாதனையை எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பாகுபலி-2’ படம் நிகழ்த்தப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர் டோனி

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் மகேந்திரசிங் டோனி. இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்தியில் படமாக எடுத்தார்கள். தற்போது, டோனியே நேரடியாக சினிமாவில் களமிறங்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரம் ஆதிஷ்பிரவின் நடிகர் விஜய்யுடன் சந்திப்பு

மத்திய அரசு 2017-ம் ஆண்டிற்கான மலையாள திரைப்படத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரமாக ஆதிஷ்பிரவினை தேர்வு செய்தது.

ரூ.240 கோடி வசூல் செய்து `பாகுபலி-2′ படைத்த புதிய சாதனை

‘பாகுபலி-2’ படம் அதிரடி சாதனை படைத்துள்ளது. நடிகர்கள் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், நடிகைகள் ரம்யாகிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா நடித்த ‘பாகுபலி-2’ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.