திரை விமர்சனம்

சங்கிலி புங்கிலி கதவ தொற – திரை விமர்சனம்

ரியல் எஸ்டேட் புரோக்கராக வரும் ஜீவா மற்றும் சூரி, பொய் சொல்லி வீடுகளை விற்பதில் வல்லவர்கள். என்ன தான் மற்றவர்களுக்கு சொந்த வீடு வாங்கிக் கொடுத்தாலும், ஜீவா தனது அம்மா ராதிகாவுடன் சொந்த வீடு இல்லை என்ற வருத்தத்துடனே வாழ்ந்து வருகிறார். தனது கணவர் இறந்த நிலையில் வாடகை வீட்டில் பட்ட கஷ்டம் காரணமாக, சொந்த …

இணையத்தளம் – திரை விமர்சனம்

படத்தின் தலைப்பிற்கு ஏற்ப ஒரு இணையதளத்தில் நேரலையில் ஒரு வீடியோ ஓடிக்கொண்டிருக்கிறது. டெல்லி கணேஷ் தனது மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பது அந்த வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது.

ஏலியன் கோவெனன்ட் – திரை விமர்சனம்

பூமியிலிருந்து 2000 பேர் கொண்ட குழு ஒரு கிரகத்தை நோக்கி விண்வெளி கப்பலில் தனது பயணத்தை தொடருகிறது. அந்த கிரகத்தில் மனிதர்கள் வாழமுடியும் என்று கிடைத்த தகவலின்படி மனிதனின் கருமுட்டையை எடுத்துக்கொண்டு அந்த கிரகத்தை நோக்கி பயணிக்கிறார்கள்.

மங்களபுரம் – திரை விமர்சனம்

டெல்லிகணேஷ் தனது பேரன், பேத்திக்கு கதை சொல்லுவதாக படத்தின் கதை ஆரம்பிக்கிறது. மங்களாபுரம் ஜமீனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் திருமணமாகி ஜமீனுடன் இருக்கிறான். இளையவனான நாயகன் யாகவன் சென்னையில் படித்து வருகிறார். படிக்கும்போதே நாயகி காயத்ரியை காதலித்து அவளை திருமணமும் செய்துகொள்கிறான்.

மர்மக்காடு – திரை விமர்சனம்

திருமணமான புதுத் தம்பதியர் தங்களது தேனிலவை கொண்டாட காட்டுப் பகுதிக்குள் செல்கிறார்கள். இவர்கள் செல்லும் வழியிலேயே காரை நிறுத்தி, இருவரும் உறவு கொள்ள முயற்சிக்கிறார்கள். அப்போது மர்மமான ஒரு உருவம் இவர்களை தாக்கி கொலை செய்கிறது. இதையடுத்து மீடியா பரபரப்பாகிறது.

திறப்பு விழா – திரை விமர்சனம்

நடிகை ரஹானா அவளது அப்பாவான ஜி.எம்.குமாருடன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறாள். மறுபுறத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான அப்பாவால் தனது குடும்பத்தை இழந்த நாயகன் ஜெயஆனந்த், அவனது சொந்த ஊரில் உள்ள மதுபானக் கடையில் வேலைக்கு வருகிறான்.

சரவணன் இருக்க பயமேன் – திரை விமர்சனம்

டெல்லியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசியக் கட்சி ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருக்கும் மதன் பாப் பிரியானியில் சிக்கன் பீஸ் இல்லாத காரணத்தால் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்குகிறார். அந்த கட்சியில் தமிழக தலைமைப் பொறுப்புக்கு சூரி பொறுப்பேற்கிறார்.

எய்தவன் – திரை விமர்சனம்

சென்னையில் தனது அப்பா வேல ராமமூர்த்தி, அம்மா, தங்கையுடன் வசித்து வருகிறார் நாயகன் கலையரசன். கலையரசனும் அவரது நண்பன் ராஜ்குமாரும் இணைந்து, பணம் எண்ணும் எந்திரத்தை விற்பனை செய்யும் நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகின்றனர். சிறுவயது முதலே கலையரசனின் தங்கையை மருத்துவராக்க வேண்டும் என்று அவரது குடும்பமே ஊக்குவித்து வருகிறது.

லென்ஸ் – திரை விமர்சனம்

மிஷா கோஷாலை திருமணம் செய்துகொண்ட நாயகர்களுள் ஒருவரான ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தவில்லை. மாறாக தகாத வழியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.

கார்டியன்ஸ் ஆப் தி காலக்சி II – திரை விமர்சனம்

அதிக சக்தி வாய்ந்த பேட்டரிகள் ஒரு கிரகத்தில் உள்ளது. அந்த பேட்டரிகளை பாதுகாக்கும் பொறுப்பு கார்டியன்ஸ் ஆகிய கிறிஸ் பிராட், ஜோ சைதானா, டேவ் பௌதிஸ்தா, பேபி குரூட், ராக்கெட் ஆகியோர்களிடம் இருக்கிறது. ஆனால், அந்த பேட்டரிகளில் சிலவற்றை சில மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிடுகிறார்கள். எனவே, அவர்களை தேடிக்கண்டுபிடித்து இவர்கள் 5 பேரும் அந்த …

ஆரம்பமே அட்டகாசம் – திரை விமர்சனம்

நாயகன் ஜீவாவின் அப்பா பாண்டியராஜன் சிறுவயதில் காதலித்த பெண்ணை திருமணம் செய்யமுடியவில்லை என்பதால் தனது மகனை சிறுவயதில் இருந்து காதலித்துதான் திருமணம் செய்யவேண்டும் என்று சொல்லியே வளர்க்கிறார்.

எங்க அம்மா ராணி – திரை விமர்சனம்

மலேசியாவில் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் தன்ஷிகா. இவரது கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றவர் திரும்பி வராததால் அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், தன்ஷிகாவின் ஒரு குழந்தை திடீரென மயக்கமடைந்து கீழே விழ, அந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். அன்று இரவே அந்த குழந்தை இறந்து போகிறது.

பாகுபலி 2 – திரை விமர்சனம்

போரில் காலகேயனை கொன்றுவிட்டு, பிரபாஸை மகிழ்மதி அரசாங்கத்தின் அரசனாகவும், ராணாவை படைத் தளபதியாகவும் ராஜமாதாவான ரம்யாகிருஷ்ணன் பிரகடனம் செய்கிறார். அதன்பிறகு, பிரபாஸுக்கு அரசனாக முடிசூட்ட பட்டாபிஷேகம் செய்ய நாட்கள் குறிக்கிறார்கள்.

ரெயில் ரோடு டைகர்ஸ் – திரை விமர்சனம்

ஜப்பான், சீனாவுக்குள் ஊடுறுவி ஒவ்வொரு பகுதிகளாக ஆக்கிரமித்து வரும் காலகட்டம். சீனாவின் மாஞ்சூரியா என்ற இடத்துக்குள் ஜப்பானியர்கள் ஊடுருவி, அங்குள்ள மக்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

நகர்வலம் – திரை விமர்சனம்

சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டி வருகிறார்கள் நாயகன் பாலாஜி பாலகிருஷ்ணன் மற்றும் யோகி பாபு. பாலாஜிக்கு ஒத்தாசையாக பால சரவணன் வருகிறார். யோகி பாபு தண்ணீர் சப்ளை செய்யும் பகுதியில், 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியான நாயகி தீக்‌ஷிதா மாணிக்கம், ஒரு இசை பிரியர்.

இலை – திரை விமர்சனம்

பெண்களை படிக்க வைக்க விரும்பாத ஒரு கிராமத்தில் வாழ்ந்துவரும் நாயகி சுவாதி நாராயணன், நன்றாக படித்து சமூகத்தில் சாதிக்கவேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறாள்.

சிவலிங்கா – திரை விமர்சனம்

சக்திவேல் வாசு மற்றும் அவரது அப்பா சந்தானபாரதி இருவரும் பிரியாணி மாஸ்டர்கள். நடிகை சாராவும் அவரது அப்பாவான ராதாரவியும் சைவ உணவு மாஸ்டர்கள். இந்த இரு குடும்பமும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் ஒன்றாகவே சமைப்பார்கள். இந்த நெருக்கமானது, சக்திவேல் வாசுவுக்கும், சாராவுக்கும் இடையே காதலை உண்டாக்கியது.

கடம்பன் – திரை விமர்சனம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கடம்பவனம் எனும் மலை கிராமத்தில் மலைவாழ் மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகிறார் ஆர்யா. இந்த கூட்டத்திலேயே ஆர்யா கைதேர்ந்த வேட்டைக்காரனாகவும், துணிச்சல்காரனாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், இதே கூட்டத்தை சேர்ந்த நாயகி கேத்தரின் தெரசா, ஆர்யா மீது காதல் வலை வீசுகிறார்.

ப.பாண்டி – திரை விமர்சனம்

சினிமா ஸ்டண்ட் மாஸ்டரான ராஜ்கிரண், தன் மகன் பிரசன்னா, மருமகள் சாயா சிங், பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வருகிறார். வயதானாலும் இவர் வசிக்கும் பகுதியில் நடக்கும் தவறுகளை துணிச்சலுடன் தட்டிக் கேட்கிறார்.

பாஸ்ட் & பியூரியஸ் 8 – திரை விமர்சனம்

பாஸ் அண்ட் ப்யூரியஸ் 8-வது பாகத்தில் நாயகன் வின் டீசல் மற்றும் மிச்சல் ரோட்ரிகஸ் சந்தோசமாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஒரு நாள் வின்டீசலை பார்க்க வரும் சார்லிஸ் தெரோன் என்னும் பெண், அவருக்கு ஒரு வேலை கொடுக்கிறார். அதனை செய்ய மறுக்கும் வின் டீசலிடம், தெரோன் ஒரு வீடியோவை காட்ட, அந்த வீடியோவை பார்த்து …

காற்றுவெளியிடை – திரை விமர்சனம்

காற்று வெளியிடை படத்தின் கதை 1999-ல் தொடங்குகிறது. இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான கார்கில் போரில் பைலட்டான கார்த்தி, சண்டையின்போது இவர் பயணித்த போர் விமானம் எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாக அதிலிருந்து தப்பித்து பாகிஸ்தானில் விழுகிறார்.

8 தோட்டாக்கள் – திரை விமர்சனம்

கதாநாயகன் வெற்றி சிறுவயதிலேயே செய்யாத தப்புக்காக ஜெயிலுக்கு போகிறார். சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படும் வெற்றியை புரிந்துகொண்ட காவலர் ஒருவர் அவனுக்கு உதவி செய்ய நினைக்கிறார். அவனை போலீஸ் அதிகாரியாக ஆகும்படி வற்புறுத்துகிறார். போலீஸ் வேலையில் விருப்பம் இல்லாத வெற்றி, போலீஸ் அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க பெரியவனானதும் போலீசாகிறார்.

ஜூலியும் 4 பேரும் – திரை விமர்சனம்

கலிபோர்னியாவில் ராசியான நாயாக கருதப்படும் ஜுலியை கடத்தல் கும்பல் ஒன்று அதன் உரிமையாளரை கொன்றுவிட்டு சென்னைக்கு கடத்தி வருகிறது. அந்த நாயை கடத்தி வரச் சொன்னது நாயகி அல்யாவின் தந்தைதான். அந்த நாயை கடத்தி வந்ததற்காக அந்த கடத்தல் கும்பலுக்கு ரூ.1 கோடி ரூபாய் கொடுக்கிறார் அல்யாவின் தந்தை.

செஞ்சிட்டாலே என் காதல – திரை விமர்சனம்

நாயகன் எழில் துரை கல்லூரியில் படித்து வருகிறார். வழக்கறிஞரான தந்தை அஜய் ரத்னம், தாய், தங்கை என தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் தனது தங்கையின் தோழியான மதுமிலாவை பார்க்கும் நாயகனுக்கு அவர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. பின்னர் சில நாட்களுக்கு பிறகு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மதுமிலாவை மீண்டும் பார்க்க, அவள் மீதான …

நாந்தான் ஷபானா – திரை விமர்சனம்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் டாப்சி தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார். இயல்பாகவே மிகவும் தைரியமான பெண்ணான டாப்சி, குடோ என்ற தற்காப்புக்கலை பயிற்சியாளராவார். மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் டாப்சியை அதே கல்லூரியில் படிக்கும் இளைஞர் ஒருவர் காதலிப்பதாகக் கூறுகிறார். அதேநேரத்தில் மர்ம நபர் ஒருவர் டாப்சியை உளவு பார்த்து, டாப்சி குறித்த …