MENUMENU

திரை விமர்சனம்

என் ஆளோட செருப்ப காணோம் – திரை விமர்சனம்

கல்லூரியில் படித்து வரும் ஆனந்தியை யோகி பாபு ரொம்ப நாளாக பின் தொடர்கிறார். ஆனந்தியை ஒருதலையாக காதலிப்பதாகக் கூறி வரும் யோகி பாபு, ஆனந்தியை சைட் அடிக்க கல்லூரியில் படிக்கும் நாயகன் தமிழையும் தன்னுடன் துணைக்கு அழைத்துச் செல்கிறார்.

அறம் – திரை விமர்சனம்

ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அருகில் இருக்கும் சிறிய கிராமம் ஒன்றில் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். அவர்களது அன்றாட வாழ்விற்கு குடிநீரின்றி உப்பு தண்ணீரை பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்படும் அந்த ஊர் மக்கள் தங்களின் தண்ணீர் தேவைக்காக பூமியில் ஆழ்துளையிட்டு தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

143 – திரை விமர்சனம்

விஜகுமாரின் மகனான நாயகன் ரிஷி வேலைக்கு செல்லாமல் தனது நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இதனால் கடுப்பாகும் விஜய் குமார் வெளியூரில் இருக்கும் தனது நண்பனின் காஃபி ஷாப்பில் ரிஷியை வேலைக்கு சேர சொல்லி வற்புறுத்துகிறார். ஒரு கட்டத்தில் ரிஷி, தனது தந்தையின் பேச்சைக் கேட்டு அந்த காஃபி ஷாப்பிற்கு வேலைக்கு …

நெஞ்சில் துணிவிருந்தால் – திரை விமர்சனம்

நாயகன் சந்தீப்பின் அப்பாவான சிவா, ஒரு சிறிய ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனால், தவறான ஆப்ரேஷன் காரணமாக அவர் இறந்துபோகிறார். அந்த மருத்துவமனையின் போலி டாக்டர்களால்தான் சிவா இறந்தார் என்று நிரூபித்து அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கிறார்கள்.

இப்படை வெல்லும் – திரை விமர்சனம்

திருவண்ணாமலையில் பஸ் டிரைவராக இருக்கிறார் ராதிகா. இவருடைய மகனான உதயநிதி, சென்னையில் ஐ.டி. துறையில் வேலைபார்த்து, பின்னர் வேலை இல்லாமல் இருக்கிறார். நாயகி மஞ்சிமா மோகனும், உதயநிதியும் காதலித்து வருகிறார்கள். இவர்களுடைய காதல் விஷயம், மஞ்சிமா மோகனின் அண்ணனான ஆர்.கே.சுரேஷுக்கு தெரியவருகிறது.

தி ஃபாரீனர் – திரை விமர்சனம்

முன்னாள் போர் வீரரான ஜாக்கி சான் லண்டனில் உணவகம் நடத்தி வருகிறார். அப்போது, தீவிரவாதிகள் நடத்தும் குண்டுவெடிப்பில், தன் மகளை ஜாக்கி சான் இழக்கிறார். வருத்தத்தில் இருக்கும் ஜாக்கி சான், தன் உணவகத்தில் வேலை பார்க்கும் பெண்ணிடம் உணவகத்தை ஒப்படைத்து விடுகிறார்.

தோர் : ரக்னராக் – திரை விமர்சனம்

தோரின் உலகமான ஆஸ்கார்டில் தன்னுடைய அப்பா உருவத்தில் இருக்கும் லோகி சந்திக்கிறார். இவன் தந்தை இல்லை என்பதை அறிந்து அவருடன் சேர்ந்து தன் அப்பாவை தேடி உலகிற்கு வருகிறார். அங்கு, தன்னுடன் வந்த லோகி, தன்னுடைய சகோதரர் என்பது அப்பா மூலம் தெரிந்துக் கொள்கிறார். இந்நிலையில், தோரின் அப்பா இறக்கிறார். மிகவும் சக்தி வாய்ந்த தோரின் …

அவள் – திரை விமர்சனம்

சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா திருமணமாகி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மலைப்பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் வசித்து வருகின்றனர். டாக்டரான சித்தார்த் மூளை சம்பந்தப்பட்ட சிகிச்சை செய்வதில் சிறந்தவர். இவ்வாறாக மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கை நடத்தி வரும் நிலையில், அவர்களது வீட்டிற்கு அருகில் மூடப்பட்டு கிடக்கும் வீட்டிற்கு அதுல் குல்கர்ணி தனது குடும்பத்துடன் குடிபெயர்கிறார்.

விழித்திரு – திரை விமர்சனம்

நான்கு வெவ்வேறு கதைகள் ஒரே இடத்தில் சந்திப்பதே ‘விழித்திரு’ படத்தின் கதை. திருட்டு தொழில் செய்து வரும் விதார்த், ஒரு வீட்டிற்கு திருட செல்கிறார். அதே வீட்டிற்கு திருட சென்ற தன்ஷிகாவை, வீட்டின் உரிமையாளர் தம்பி ராமையா அவரை திருமண கோலத்தில் கட்டி வைத்திருக்கிறார். அதைக்கண்ட விதார்த், தன்ஷிகாவை காப்பாற்றி தன்னுடன் அழைத்துச் செல்கிறார். திருடிய …

ஜியோ ஸ்டோர்ம் – திரை விமர்சனம்

உலகில் இயற்கை சீற்றத்தால் பல பேரழிவுகள் நடைபெற்று வருகிறது. இதை தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து டச்பாய் என்ற செயற்கை கோள் ஒன்றை உருவாக்குகிறார்கள். இந்த செயற்கோளை ஜெரார்ட் பட்லர் தலைமையில் உருவாக்குகிறார்கள். இதன் மூலம் இயற்கை சீற்றங்கள் தடுக்கப்படுகிறது.

களத்தூர் கிராமம் – திரை விமர்சனம்

தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் அமைந்துள்ளது களத்தூர் கிராமம். திருட்டுத் தொழிலை பூர்வீகமாகக் கொண்ட அந்த கிராமத்தின் தலைவராக கிஷோர் வருகிறார். களத்தூர் கிராமம் வழியாக செல்லும் வண்டிகளை மடக்கி அவர்களிடம் வழிப்பறி செய்வதையே தொழிலாக கொண்டுள்ளனர் அந்த ஊர் மக்கள். ஊருக்கு வெளியே ஒரு காவல் நிலையம் இருந்தும் ஊருக்குள் போலீஸ் செல்லக்கூடாது என்ற …

கடைசி பெஞ்ச் கார்த்தி – திரை விமர்சனம்

நாயகன் பரத் ஊரில் இருந்து சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்கிறார். இதே கல்லூரியில் படித்து வரும் நாயகி ருஹானி ஷர்மா சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். ஏழைகளுக்கு இரத்ததானம் செய்வது, கல்லூரியில் படிக்கும் மாணவர்களை இரத்ததானம் செய்ய வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

மெர்சல் – திரை விமர்சனம்

படம் ஆரம்பத்தில் மருத்துவத் துறையில் சம்மந்தப்பட்டவர்களான ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் மருத்துவ துறையில் வேலை பார்ப்பவர்கள், சிலர் கடத்தப்படுகிறார்கள். மேலும் டாக்டர்கள் சிலர் கொலை செய்யப்படுகின்றனர். இந்த சம்பவங்களில் ஈடுபடிபவர்களை போலீஸ் அதிகாரி சத்யராஜ் தலைமையிலான தனிப்படை தேடுகிறது. இந்த தேடுதலில் விஜய்தான் இதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கிறார்கள். இதனால் விஜய் கைது செய்யப்படுகிறார்.

சென்னையில் ஒரு நாள் 2 – திரை விமர்சனம்

சென்னையில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் சரத்குமார், கோயம்புத்தூருக்கு பணி இடமாற்றம் செய்யப்படுகிறார். அங்கு, தன்னுடைய மாமாவின் பிள்ளைகளான ஒரு மகனையும், 2 பெண்களையும் வளர்த்து வருகிறார். இதில் ஒரு பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது.

மேயாத மான் – திரை விமர்சனம்

நாயகன் வைபவ் தன் தங்கை இந்துஜாவுடன் வாழ்ந்து வருகிறார். தாய், தந்தை இழந்த இவர், தங்கை மீது அதிக பாசத்துடன் இருந்து வருகிறார். மேலும் மேயாத மான் என்ற மெல்லிசைக் குழு ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நாயகி பிரியாவை மூன்று வருடங்களாக ஒருதலையாக காதலித்து வருகிறார்.

சோலோ – திரை விமர்சனம்

துல்கர் சல்மான் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் சோலோ. 4 கதைகள் கொண்ட இப்படமானது நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகிய நான்கு அம்சங்களை மையமாக வைத்து உருவாகி உள்ளது.

கருப்பன் – திரை விமர்சனம்

நாயகன் விஜய்சேதுபதி காளை அடக்குவதில் வல்லவர். ஆனால், எந்த வேலைக்கும் போகாமல், நண்பர் சிங்கம்புலியுடன் குடித்துக் கொண்டு ஊரை சுற்றி வருகிறார். இந்நிலையில் காளை அடக்கும் போட்டி வருகிறது. அதில், அதே ஊரில் இருக்கும் பசுபதியின் காளையும் பங்கேற்கிறது.

ஹர ஹர மஹாதேவகி – திரை விமர்சனம்

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பெண்களை குறிவைத்து மேக்கப் பொருட்கள் அடங்கிய பை ஒன்று அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் அதே கட்சியில் இருக்கும் முக்கிய தலைவரான ரவிமரியா அந்த மேக்கப் பைகளில் ஒன்றில் வெடிகுண்டை வைத்து அதனை கருணாகரன், மொட்டை ராஜேந்திரனிடம் கொடுத்து தன்னுடைய கட்சித் தலைவர்கள் …

ஸ்பைடர் – திரை விமர்சனம்

மிகவும் திறமைசாலியான நாயகன் மகேஷ் பாபு, பொதுமக்களின் போன் கால்களை ஒட்டுக்கேட்கும் ஏஜென்சி வேலையைச் செய்து வருகிறார். மேலும் போனில் பேசும் அப்பாவி மக்கள் யாராவது பிரச்சனையில சிக்கியிருக்கிறது மகேஷ் பாபுவுக்கு தெரிய வந்தால், அந்த பிரச்சனையில் இருந்து அவர்களை விடுவிக்கிறார்.

களவு தொழிற்சாலை – திரை விமர்சனம்

நாயகன் கதிர் கோயில்களில் உள்ள சிறுசிறு சிலைகளை திருடுவது, அதனை விற்பது என சிறிய அளவில் சிலை கடத்தல் தொழிலை செய்து வருகிறார். சிலை கடத்தல் என்றாலே அந்த பகுதி போலீசால் கைது செய்யப்படும் முதல் ஆள் கதிர் என்று சொல்லும் அளவுக்கு பிரபலமானவனாக வருகிறார். இதுஒருபுறம் இருக்க கதிரும், நாயகி குஷியும் காதலித்து வருகின்றனர்.

பயமா இருக்கு – திரை விமர்சனம்

கணவன், மனைவியான சந்தோஷ் பிரதாப்பும், ரேஷ்மி மேனனும் கிராமத்திற்கு ஒதுக்கபுறமாக தண்ணீர் சூழ்ந்த பகுதியில் உள்ள தனி வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் ரேஷ்மியின் பிரசவ காலத்தில் அவளுக்கு உதவுவதற்காக இலங்கையில் உள்ள ரேஷ்மியின் அம்மாவை அழைத்து வருவதற்காக நாயகியை தனியாக விட்டுவிட்டு சந்தோஷ் இலங்கை செல்கிறார்.

ஆயிரத்தில் இருவர் – திரை விமர்சனம்

எதிரும் புதிருமான இரட்டையர்களின் வாழ்வில் நடக்கும் திருப்பங்களை வித்தியாசமாக செல்லும் படம் ஆயிரத்தில் இருவர். திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தம்பதியருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. கதாநாயகன் வினய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இருவரும் எப்போதும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள். தாயின் வயிற்றுக்குள் இருக்கும் போதே அடித்துக்கொள்ளும் அளவிற்கு இவர்கள் இருவருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் ஒத்துப்போவதில்லை.

தெரு நாய்கள் – திரை விமர்சனம்

மன்னார்குடியில் மிகவும் செல்வந்தர்களான மதுசூதனன் மற்றும் சேட் ஆகியோர் எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டி போடுகிறார்கள். ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், மதுசூதனன் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, விவசாய நிலங்களை அக்கிரமிப்பு செய்து எரிவாயு குழாய்களை பதிந்து வருகிறார்.

யார் இவன் – திரை விமர்சனம்

கோவா போட் ஹவுஸில் நாயகி இஷா குப்தாவை நாயகன் சச்சின் ஜோஷி கொலை செய்கிறார். போலீசார் சச்சின் ஜோஷியை கைது செய்வதில் இருந்து தொடங்குகிறது படம். நாயகி இஷா குப்தாவின் கொலை வழக்கை கிஷோர் விசாரிக்க ஆரம்பிக்கிறார். முதலில் இஷா குப்தாவின் தோழி தன்யாவின் மூலம் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள் என்றும் பணத்திற்காகத் தான் …

மகளிர் மட்டும் – திரை விமர்சனம்

டிஸ்கவரி சேனலில் வேலை செய்யும் ஜோதிகா, வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து குடும்பத்தை மட்டும் பார்த்துக் கொள்ளும் பெண்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி ஒரு ஆவணப் படத்தை எடுக்கிறார்.